மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்!
மதுரை: மதுரை மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் நேருக்கு நேராக 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் மோதுகின்றன. இதில் மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
அதேபோல் மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வெற்றியும் ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது. ஆனால் மதுரை வடக்கு தொகுதியில் மாவட்டச் செயலாளர் தளபதி களத்தில் இருக்கிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் சரவணனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக சார்பாக கல்லணை மற்றும் நாதக சார்பாக திருநாவுக்கரசு போட்டியிடுகின்றனர்.

கடந்த தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட தளபதி 73 ஆயிரம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் பாஜக சார்பாக போட்டியிட்ட சரவணன் சுமார் 50 ஆயிரம் வாக்குகளை பெற்றார். நாதக தரப்பில் சுமார் 15 ஆயிரம் வாக்குகளை பெறப்பட்டது. இந்த முறை தவெகவுக்கு கணிசமான அளவிற்கு மதுரை வடக்கு தொகுதியில் ஆதரவு இருந்து வருகிறது.
இதில் தளபதி நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். சரவணன் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். அதேபோல் சரவணனின் வீடு, மருத்துவமனை உள்ளிட்டவையும் வடக்கு தொகுதியிலேயே வருகிறது. அதேபோல் கடந்த முறை பாஜக சார்பாக போட்டியிட்ட போதே மக்களிடம் நன்கு அறிமுகமாகிவிட்டார்.
ஆனால் சரவணனுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை உட்கட்சி மோதல் தான். ஏனென்றால் செல்லூர் ராஜுவை மீறி சரவணன் எப்படியோ எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையை பெற்றுவிட்டார். முதலில் மதுரை வடக்கு தொகுதி பாஜகவுக்கே ஒதுக்கப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சரவணன் கைகள் ஓங்கியது. மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜு வெல்வது கடினமாக இருக்கிறது.
ஒருவேளை செல்லூர் ராஜு தோல்வி அடைந்து சரவணன் வென்றால், மதுரை மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்றிவிட முடியும். இதனால் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் சரவணனுக்கு ஆதரவாக இல்லை. அதேபோல் களத்திலும் சரவணன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் தவெகவினர் பிரிக்கும் வாக்குகள் சரவணனுக்கு எதிராக செல்லக்கூடும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த பகுதியில் செளராஷ்டிரா மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். அவர்கள் தவெக பக்கம் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் மாவட்டச் செயலாளரான கல்லணை களத்தில் இருப்பதால், கணிசமான வாக்குகளை பெறுவார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் திமுக வேட்பாளர் தளபதி மீண்டும் வாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?










Click it and Unblock the Notifications