மதுரை வடக்கு தொகுதி.. 2 முறையும் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர்கள்.. மானம் காத்த திமுக!
மதுரை: மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டு, தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி எப்படியான தோல்விகளை சந்தித்துள்ளது என்பது தொடர்பாக பார்க்கலாம்.
மதுரை வடக்கு தொகுதியின் எம்எல்ஏ-வும், திமுக மாவட்டச் செயலாளருமான கோ.தளபதியின் பேச்சு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் பூத் கமிட்டி கூட அமைக்க முடியாது என்றும், மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்டோருக்கு அடுத்த முறை சீட் கொடுக்க கூடாது என்றும் தளபதி பேசியுள்ளார்.

இதனால் டென்ஷனான காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.
இதனால் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி இருமுறை போட்டியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த இரு முறையும் காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. 2011 சட்டசபைத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது அதிமுக தரப்பில் ஏகே போஸ் வேட்பாளராக களமிறங்கினார். காங்கிரஸ் கட்சி தரப்பில், ராஜேந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் 90,706 வாக்குகளும், காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திரன் 44,306 வாக்குகளும் பெற்றனர். சுமார் 56 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தரப்பில் ராஜன் செல்லப்பாவும், காங்கிரஸ் கட்சி தரப்பில் வி கார்த்திகேயன் என்பவரும் போட்டியிட்டனர்.
இதில் ராஜன் செல்லப்பா 70,460 வாக்குகளும், கார்த்திகேயன் 51,621 வாக்குகளும் பெற்றனர். மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்பின் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை திமுகவே வைத்துக் கொண்டது. இம்முறை மதுரை வடக்கு தொகுதியை பாஜகவுக்கு அதிமுக விட்டுக் கொடுத்தது.
இந்தத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட கோ.தளபதி சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதன் மூலமாக மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஹாட்ரிக் தோல்வியை தடுக்கும் பொருட்டு திமுக மானம் காத்திருப்பதாக அக்கட்சியினர் மீண்டு விவாதித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications