மதுரையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்.. கமிஷனர் அதிரடி உத்தரவு.. பின்னணி என்ன?
மதுரை: மதுரையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். 16 பேரை மாற்றி மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். சுமார் 160 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 24 பேரை கைது செய்துள்ளனர். கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தால், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை தொடங்கினர்.
மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் முறையாக பணியாற்றவில்லை என்றும் புகார் எழுந்தது. இதையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல்துறையினர் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். மதுவிலக்கு சார்பு ஆய்வாளர், சிறப்பு ஆய்வாளர் உட்பட 16 பேரை மாற்றி மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications