Madurai Sanitation Workers Protest: மதுரையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடங்கியது! பணி நிரந்தரம் கோரி முழக்கம்!
மதுரை: சென்னையில் ரிப்பன் மாளிகை வெளியே காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்ததும், போராடிய தூய்மை பணியாளர்களை தமிழக அரசு கையாண்ட விதமும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில் மதுரையில் இன்று தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடங்கியிருக்கிறது.
மதுரை மாநகராட்சி மொத்தம் 5 மண்டலங்களையும் 100 வார்டுகளையும் உள்ளடக்கி இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்து மாநகரை தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் தூய்மை பணியாளர்களுக்கான போதிய பலன்கள் கிடைப்பதில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுகிறது. ஓய்வூதியம், காப்பீடு, பிஎஃப் ஆகியவை கிடைப்பதில்லை என்றும் உழைப்பு சுரண்டல் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தங்களை நிரந்தர பணியாளராக மாற்றவும் தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது அவை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இந்நிலையில் தங்களது கோரிக்கையை முன்வைத்து, தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் மிக முக்கிய கோரிக்கை தனியார் மயத்தை கைவிட வேண்டும் என்பதாகும் .
மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய அரசாணை 62(2D) -யின் படி மாதச் சம்பளமாக 26,000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், தீபாவளி போனசாக 1 மாத ஊதியம் வழங்க வேண்டும் என்றும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
போராட்டம் தொடர்பாக ஏற்கெனவே தொழிற்சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனையடுத்து பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications