யம்ம்மாடியோவ்.. மனைவிக்கு இத்தனை "ஆண் நண்பர்களா".. தலைசுற்றிப்போன தேனி கணவன்.. கடைசியில் பார்த்தால்?
மதுரை: தன்னுடன் குடும்பம் நடத்த மனைவி வராதது, பூவேந்தனுக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது.. கடைசியில் 2 கொலை வரை சென்றுவிட்டது இந்த குடும்ப தகராறு.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எருமாப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் 55 வயது மாயி.. இவரது 25 வயது மகள் பூவேந்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

உசிலம்பட்டி அருகே உள்ள சொரக்காபட்டியைச் சேர்ந்தவர் இந்த பூவேந்தன்.. இவர்கள் இருவருமே தேனியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.. இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
பூவேந்தன், கஞ்சா போதைக்கு அடிமையாகியிருக்கிறார்.. மேலும், போதையில் வீட்டுக்கு வந்து பவித்ராவிடம் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. பவித்ரா எவ்வளவோ முயற்சித்தும் பூவேந்தனின் கஞ்சா பழக்கத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.
இதையடுத்து, நடந்த தகராறு காரணமாக, கடந்த 3 நாட்களுக்கு முன்பு பவித்ரா, தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டியில் உள்ள முருகன் கோவில் தெருவில் இருக்கும் தன்னுடைய பாட்டி வீட்டுக்கு கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார்.. அவரது அப்பா மாயி, மகள் பவித்ராவுக்கு துணையாக வந்துவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், தன்னுடைய நண்பருடன் பைக்கில் பவித்ராவை தேடி வந்தார் பூவேந்தன்.. பவித்ராவுடன் தகராறு செய்தபோது, ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த பூவேந்தன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பவித்ராவை சரமாரியாக கத்திவிட்டார்.. அதை தடுக்க வந்த மாமனார் மாயியையும் கத்தியால் குத்தி கொன்று தப்பிவிட்டார் பூவேந்தன்.
பவித்ரா, மாயி இருவருமே ரத்த வெள்ளத்தில் சுருண்டு உயிரிழந்தனர். பூவேந்தனுடன் வந்த அவரது நண்பர் முருகேசனை அந்த பகுதி மக்களே விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பிறகு, பூவேந்தனின் நண்பர் முருகேசனை விசாரணைக்கு பிறகு போலீசார் அனுப்பி விட்டனர்.
இதையடுத்து, அன்றைய தினம் இரவே, க.விலக்கு பகுதியில் தலைமறைவாக இருந்த பூவேந்தனையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையும் நடத்தினர். அப்போதுதான், மனைவியை கொன்ற காரணத்தை போலீசாரிடம் வாக்குமூலமாக கூறினார் பூவேந்தன் .
சந்தேகம்: மது, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான பூவேந்தனுக்கு, கல்யாணம் ஆனதில் இருந்தே பவித்ராவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்படுமாம். அடிக்கடி மனைவியை சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்திருக்கிறார்.. போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட கணவனை திருத்த முடியாத பவித்ரா, தன்னுடைய பெரும்பாலான நேரத்தை இன்ஸ்டாகிராமில் செலவிட்டு வந்துள்ளார்.
எந்நேரமும் இன்ஸ்டாவில் மூழ்கியதால், அதிகமான ஆண் நண்பர்கள் பவித்ராவுக்கு பழக்கமாகி உள்ளார்கள்.. அதிலும், பவித்ரா வீட்டு பகுதியை சேர்ந்த ஆண் நண்பர்கள் இன்ஸ்டாவில் அறிமுகமாகியிருக்கிறார்கள்.. இந்த பழக்கம் தகாத உறவாகவும் மாறியதாக தெரிகிறது.. மனைவியின் கள்ளக்காதல், பூவேந்தனுக்கு தெரியவந்ததையடுத்து, பவித்ராவை கண்டித்துள்ளார்..
ஆண் நண்பர்கள்: எனினும், பவித்ரா ஆண் நண்பர்களுடன் பழகுவதை நிறுத்தவில்லையாம். இது தொடர்பாக தம்பதிக்குள் தகராறு வரவும்தான், தன்னுடைய பாட்டி வீட்டுக்கு கிளம்பி சென்றுள்ளார் பவித்ரா. ஆனால், பாட்டி வீட்டுக்கு சென்றும் கள்ளக்காதலை வளர்த்ததாகவும், அந்த ஆண் நண்பர்களிடம் பவித்ரா தொடர்ந்து பேசிவருவதாகவும் பூவேந்தனுக்கு தெரியவந்துள்ளது.
இதனால், சம்பந்தப்பட்ட நபருக்கு போனை போட்ட பூவேந்தன், தன்னுடைய மனைவியிடம் எதற்காக பேசினாய்? என்று கேட்டு கண்டித்தாராம்.. அதற்கு அந்த ஆண் நண்பர், ''உன் மனைவிதான் என்கிட்ட வந்து பேசினார்" என்று சொல்லியிருக்கிறார்.
பூவேந்தன்: இதைக்கேட்டதும் ஆத்திரமுற்ற பூவேந்தன், நேராக பவித்ராவை தேடி சென்று இதை பற்றி கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போதும் பவித்ரா தன்னுடைய கள்ளக்காதலை விடாமல் பேசியதால், அந்த ஆத்திரத்தில் பூவேந்தன் கொன்றுவிட்டாராம். மாமனார் குறுக்கே வந்ததால் அவரையும் கொலை செய்ததாக தெரிவித்தாராம்.. இப்போது தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications