மதுரை தெற்கை பாஜகவுக்கு கொடுத்தது ஏன்.. டென்ஷனான அதிமுகவினர்.. ராம ஸ்ரீனிவாசனுக்கு புது பிரச்சனை!
மதுரை: என்டிஏ கூட்டணியில் மதுரை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதால், அதிமுக நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக பணியாற்ற மாட்டோம் என்று கூறி தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் புறக்கணித்திருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் மதுரை தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜகவுக்கு 2வது இடம் கிடைத்தது. அதிமுகவை விட அதிக வாக்குகளை பாஜக பெற்றது. இதன் காரணமாகவே மதுரை தெற்கில் ராம ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார்.

இந்த முறை அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளதால், மதுரை தெற்கு தொகுதியை கைப்பற்ற பாஜகவில் கடுமையான போட்டி நிலவி வந்தது. 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட ஏ.ஆர்.மகாலட்சுமியும் தீவிரமாக காய் நகர்த்தி வந்தார். அந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்ட போதும் 16 ஆயிரம் வாக்குகளை பெற்றது.
அதற்கு மதுரை தெற்கு தொகுதியில் இருக்கும் செளராஷ்டிரா சமூக மக்கள் தான். மகாலட்சுமியும் செளராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த மக்களின் ஆதரவு இருந்தது. ஆனால் மதுரை தெற்கு தொகுதியில் செளராஷ்டிரா சமுதாய மக்களின் ஆதரவு இருந்தால் மட்டும் வெற்றிபெற முடியாது. பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவும் தேவையாக இருக்கிறது.
இதனால் 2016 மற்றும் 2021 ஆகிய சட்டசபைத் தேர்தலில் அதிமுக தெளிவாக செளராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.சரவணனை களமிறக்கியது. இதில் 2016ஆம் ஆண்டு சரவணன் வெற்றி பெற்றார். அதற்கு எதிர்ப்பு வாக்குகள் பிரிந்ததும் ஒரு காரணம். இந்த நிலையில் தெலுங்கு ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ராம ஸ்ரீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பாஜக ஆதரவு வாக்குகள் கிடைக்கும் என்றாலும், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதற்கு முன்பு வரை மதுரை தெற்கு தொகுதியில் சீட் கிடைக்கும் என்று ஏ.ஆர்.மகாலட்சுமி தரப்பு பணியாற்றி வந்தது. அவரது சோசியல் மீடியா பக்கத்திலும் கூட தொடர்ச்சியாக தேர்தலில் போட்டியிடுவேன் என்று பதிவுகள் வெளியானது.
இதனால் மகாலட்சுமி தரப்பு அதிருப்தியில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் மதுரை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு தள்ளிவிட்டதால், அதிமுகவினர் கடுமையான அப்செட்டில் இருக்கின்றனர். ஏற்கனவே தவெக வேட்பாளராக அன்புச்செழியன் மகன் நிற்கிறார் என்ற தகவல் வெளியான போதே, அதிமுகவினர் பலரும் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர்.
2021ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மதுரை தெற்கு தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே இருந்திருக்கிறது. இதனால் ராம ஸ்ரீனிவாசனுக்கு பணியாற்ற மாட்டோம் என்று தேர்தல் பணிகளில் இருந்து அதிமுகவினர் விலகியே இருக்கின்றனர். அதற்கேற்ப ராம ஸ்ரீனிவாசனும் இன்னும் மதுரை தெற்கு தொகுதி அதிமுகவினரை சந்திக்க கூட இல்லை.
செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், மன்னன், எஸ்ஸார் கோபி உள்ளிட்டோரையே சந்தித்திருக்கிறார். ஏற்கனவே ஆர்பி உதயகுமாரின் ஆதரவாளரான எஸ்.எஸ்.சரவணனுக்கு சீட் கொடுக்கவில்லை என்று அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதேபோல் வேட்புமனு தாக்கல் நாளை செய்ய இருக்கும் சூழலில், 17 நாட்களில் தொகுதியில் அதிப்தியில் இருக்கும் அதிமுகவினரை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது.
மறுபுறம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதன் சமுதாய வாக்குகளை ஏற்கனவே தன் பக்கம் வைத்துள்ளார். 2016ஆம் ஆண்டு தனித்து நின்ற போதே சுமார் 20 ஆயிரம் வாக்குகளை பெற்றவர். தொகுதியில் தனி செல்வாக்கு இருப்பதோடு, திமுக நிர்வாகிகளும் ஆதரவாகவே இருக்கின்றனர். இதனால் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக கரை சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications