2023ல் நடந்த மரணம்.. தனிஷ்க் கொள்ளையன் நிஷாந்த்துக்கு பின்.. இப்படி ஒரு ஹிஸ்ட்ரியா! போலீஸ் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடித்த நிஷாந்துக்கு பின் உள்ள அதிர்ச்சி தரும் பின்னணி பற்றி மதுரை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் விளக்கி உள்ளார்.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11.7 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான 25 வயது யூடியூபர் நிஷாந்த் இப்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சாதாரண வீடியோ எடிட்டராகவும், டிராவல் யூடியூபராகவும் வலம் வந்த இளைஞர் எப்படி இவ்வளவு பெரிய மெகா கொள்ளையைத் துணிந்து செய்தார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்த நிலையில், நிஷாந்தின் பழைய குற்றப் பின்னணி குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Madurai tanishq heist

2023 விபத்து வழக்கில் சிக்கிய நிஷாந்த்

செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாநகர காவல் ஆணையர், நிஷாந்த் இதற்கு முன்பு எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாத புது முகமா என்ற கோணத்தில் அவரது பழைய பின்னணியைப் போலீசார் ஆய்வு செய்ததாகத் தெரிவித்தார். ஆனால் அந்த ஆய்வில் பெரிய ஷாக் கிடைத்ததாக கூறி உள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு நிஷாந்த் ஒரு சாலை விபத்தில் சிக்கியதும், அந்த விபத்தில் எதிரே வந்த நபர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. உயிரிழப்பு ஏற்பட்ட அந்த விபத்து தொடர்பாக, அப்போது நிஷாந்த் மீது போலீசார் 304 ஏ பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வழக்கின் நிலை என்ன, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எந்தக் கட்டத்தில் உள்ளன என்பது குறித்தும் போலீசார் விவரங்களைத் திரட்டி வருகின்றனர்.

நகைக்கடை கொள்ளையின் முழு பின்னணி

பைக் ரைடிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்து வந்த நிஷாந்துக்கும், மதுரையில் ஒன்றாகக் கல்லூரியில் படித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சிக்கும் இடையே காதல் இருந்துள்ளது. மீனாட்சி புதிதாகக் கட்டி வந்த வீட்டிற்குப் பணம் தேவைப்பட்டதாலும், கடனை அடைக்கவும் சினிமா பாணியில் நகைக்கடையைக் கொள்ளையடிக்க நிஷாந்த் திட்டமிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை, தீபாவளி விற்பனைக்காக அவசரமாகத் திறக்கப்பட்டிருந்த தனிஷ்க் நகைக்கடையின் பின்புறம் இருந்த இரும்புச் சாரங்கள் வழியாக ஏறி, லிப்ட் அமைக்க வைக்கப்பட்டிருந்த திறந்தவெளி வழியாக உள்ளே இறங்கிய நிஷாந்த், 11 கிலோவிற்கும் அதிகமான தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றார்.

11.7 கிலோ நகைகளும் முழுமையாக மீட்பு

இந்த வழக்கில் ஏற்கனவே மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோரைக் கைது செய்த போலீசார், மாடக்குளம் கண்மாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5.5 கிலோ நகைகளை மீட்டனர். தொடர்ந்து 9 தனிப்படைகள் தேடி வந்த நிலையில், தர்மபுரி அருகே பேருந்தில் தப்பிச் சென்ற நிஷாந்தைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

மதுரைக்கு அழைத்து வரப்பட்ட நிஷாந்த் அளித்த தகவலின் பேரில், விளாச்சேரி அருகே உள்ள கோபாலிபுரம் மலை அடிவாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 6.2 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டனர். இதன் மூலம் கொள்ளை போன மொத்த நகைகளும் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன, என்று கமிஷ்னர் கூறி உள்ளார்.

போலீஸ் காவலில் விசாரிக்கத் திட்டம்

தற்போது நிஷாந்த் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிசம்பர் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2023-ம் ஆண்டு விபத்து வழக்கு மட்டுமின்றி, நிஷாந்துக்கு வேறு ஏதேனும் பழைய குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளதா, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து இந்தக் கொள்ளைக்குச் சதித் திட்டம் தீட்டினாரா என்பதைக் கண்டறிய, அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+