வணக்கம்டா மாப்ள.. மதுரை டைடல் பார்க்ல இருந்து! மாஸாகப் போகுது மாட்டுத் தாவணி! ஒரே வருஷம் தான்!
மதுரை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நீண்டநாள் கனவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி விரைவில் நிறைவேறப் போகிறது. சென்னை, கோவை, ஓசூர் போன்ற நகரங்கள் இதுவரை தகவல் தொழில்நுட்ப மையங்களாக வளர்ந்துள்ள நிலையில், தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரை இதுவரை அதே அளவில் வளர்ச்சி அடையவில்லை. இதனால், மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்னை அல்லது பெங்களூருக்கு இடம் பெயர வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையை மாற்றும் வகையில், மதுரையில் டைடல் பார்க் (TIDEL Park) அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாட்டுத்தாவணியில் அமைக்கப்படும் இந்த டைடல் பார்க்கிற்கு அடிக்கல் நாட்டியிருந்தார். சுமார் 5.34 லட்சம் சதுர அடியில் தரைத்தளமும், 12 தளங்களும் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடம் 280 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.
இதற்காக சுமார் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி இன்ஜினியரிங் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது; ஆலோசகராக CPL நிறுவனம் பணியாற்றுகிறது. திட்டம் தொடங்கிய 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், 2026 ஜூன் மாதத்திற்குள் இந்த டைடல் பார்க் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை டைடல் பார்க்
மதுரை டைடல் பார்க், சென்னையில் உள்ள டைடல் பூங்காவைப் போல் நவீன வசதிகளுடன் உருவாகிறது. பார்க்கிங் வசதி தரைக்கு கீழே அமைக்கப்படும்; மாடி தோறும் ஆபீஸ் ஸ்பேஸ்கள், கூட்ட அறைகள், கேன்டீன்கள் மற்றும் நவீன பாதுகாப்பு அமைப்புகளுடன் ஏற்படுத்தப்படும். இந்தப் பூங்கா செயல்பாட்டுக்கு வந்தவுடன், 5,500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம்
மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஐடி துறையில் திறமையுள்ள இளைஞர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை தங்களது ஊரில் வேலை வாய்ப்புகள் இல்லாததால், பெரும்பாலும் அவர்கள் சென்னை அல்லது பெங்களூரில் வேலை செய்து வருகின்றனர். இதனால் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இனி மதுரை டைடல் பார்க் உருவாகிய பின், அந்த நிலை மாறும். இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே உயர்ந்த சம்பளமுள்ள ஐடி வேலைகளைப் பெற முடியும்.
ஐடி வேலைவாய்ப்பு
அதற்கேற்ப, மதுரையின் பொருளாதார வளர்ச்சி பெருகும். தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாது, அதனுடன் தொடர்புடைய பல தனியார் தொழில்கள், வணிகங்கள், வாடகை வீடுகள், உணவகங்கள், போக்குவரத்து சேவைகள் ஆகியவை வளர்ச்சியடையும். இது மதுரையின் முகத்தை முழுமையாக மாற்றும் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும் என அரசு நம்புகிறது.
தொழில்நுட்ப நகரம்
சென்னையில் தொடங்கி தற்போது கோவை, ஓசூர், தஞ்சை போன்ற இடங்களிலும் டைடல் பார்க் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் வெற்றியைக் கண்காணித்து, தென் மாவட்டங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மதுரை டைடல் பார்க் திட்டம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தப் பூங்கா செயல்பாட்டுக்கு வந்ததும், தென் தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய கதவுகள் திறக்கப்படும். "தூங்கா நகரம்" என அழைக்கப்படும் மதுரை இனி "தொழில்நுட்ப நகரம்" என பெயர் பெறும் நாள் தூரத்தில் இல்லை என்கின்றனர் மதுரை வாசிகள்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications