தேர்வு கிடையாது.. மதுரையில் அரசு வேலை.. 8 முதல் டிகிரி, என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு
மதுரை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மதுரை மண்டலத்தில் மொத்தம் 450 பணிகள் காலியாக உள்ளன. இந்த பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 8 ம் வகுப்பு படித்தவர்கள் முதல் டிகிரி, என்ஜினீயரிங் படித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மதுரை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணியையொட்டி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்த பணி தொடர்பான அறிவிப்பின் முக்கிய விபரங்களை தொகுத்து வழங்கி உள்ளோம். இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மதுரை மண்டலத்தில் மொத்தம் 3 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதன்படி பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk) பணிக்கு 150 பேர், பருவகால உதவுபவர் (Seasonal Helper) பணிக்கு 150 பேர், பருவகால காவலர் (Seasonal Watchman) பணிக்கு 150 பேர் என மொத்தம் 450 பேர்தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?
Seasonal Bill Clerk பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புஏவார் பிஎஸ்சி டிகிரியை சயின்ஸ், விவசாயம் மற்றும் என்ஜினீயரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும். Seasonal Helper பணிக்கு 12ம் வகுப்பும், Seasonal Watchman பணிக்கு 8 ம் வகுப்பும் படித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு 5 வயது வரையும், எம்பிசி, பிசி, பிசி(எம்) பிரிவினருக்கு 2 வயது வரையும் தளர்வுகள் அளிக்கப்பட உள்ளது.

மாத சம்பளம் எவ்வளவு?
Seasonal Bill Clerk பணிக்கு தேர்வாகும் நபருக்கு சம்பளமாக ரூ.5,285 + (DA) 3,499/-TA Rs.120/ கிடைக்கும். அதன்படி பார்த்தால் மாத சம்பளமாக ரூ.8,904 வரை கிடைக்கும். மற்றும் Seasonal Watchman பணிக்கு ரூ.5,218 சம்பளம் + (DA) 3,499/-TA Rs.100கிடைக்கும். அதன்படி பார்த்தால் மாதம் ரூ.8,817 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் ‛மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், 10 குருவிக்காரன் சாலை, அண்ணாநகர், மதுரை 20 என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் பதவியில் பெயர், விபரத்தை விண்ணப்பம் மற்றும் விண்ணப்ப உறையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். விண்ணப்பம் செய்ய 2023 ஜனவரி மாதம் 10ம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வு செய்வது எப்படி?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் Short list செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். நேர்க்காணல் என்பது 2023 ஜனவரி மாதம் 18 ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், அதன்பிறகு ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை காண Click Here












Click it and Unblock the Notifications