மதுரை டூ பெங்களூர் வந்தே பாரத் ரயில் டைமிங் திடீர் மாற்றம்.. புதிய நேர அட்டவணை வெளியீடு.. என்னாச்சு
மதுரை: பெங்களூர் டூ மதுரை வந்தே பாரத் ரெயில் சேவையில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது... பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில், இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டிருக்கிறது.
மதுரையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த வாரம் தொடங்கி வைத்தார்... காரணம், ஐடி தலைநகரான பெங்களூருக்கு, தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சென்று வருகிறார்கள்.. அதிலும், சமீப காலமாகவே, தென் மாவட்டங்களிலிருந்தும் பெங்களூருக்கு நிறைய பேர் பயணம் செய்து வருகிறார்கள்.

எனவே, மதுரை, திருச்சியில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது..
புதிய ரயில் சேவை: பெங்களூரு கன்டோன்மென்ட்-மதுரை இடையே கடந்த 31-ந்தேதி வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. இந்த ரயிலானது ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம், இந்த வந்தே பாரத் ரயில் மொத்தம் 8 பெட்டிகளை கொண்டது.. செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருச்சி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் 5 நிமிடங்கள் நின்று செல்கிறது. இதர ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்கிறது.
இந்த ரயிலில் ஏசி சேர் காரில் 1,575 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 2,865 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் பயணிகளுக்கு உணவும் வழங்கப்படும். ஆனால், இதற்கு பணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
டைமிங் இதுதான்: மதுரையிலிருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் ( வண்டி எண்; 20671), திண்டுக்கல்லுக்கு காலை 5.59 மணிக்கும், திருச்சிக்கு 6.50 மணிக்கும், கரூருக்கு 8.08 மணிக்கும், நாமக்கல்லுக்கு 8.32 மணிக்கும், சேலத்திற்கு 9.15 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு மதியம் 12.50 மணிக்கும், 1 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்து சேரும்.
அதுபோல மறுமார்க்கத்தில், பெங்களூர் கண்டோன்மெண்டில் இருந்த பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20672) கிருஷ்ணராஜபுரத்திற்கு 1.35 மணிக்கு வந்து சேரும். சேலத்திற்கு மாலை 4.50 மணிக்கும், நாமக்கல்லுக்கு 5.38 மணிக்கும், கரூருக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு இரவு 7.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 8.28 மணிக்கும், மதுரைக்கு 9.45 மணிக்கும் வந்தடையும்.
சிறிய மாற்றம்: முன்தினம் முதல் இந்த ரெயில் முறையாக இயங்கி வரும்நிலையில், பெங்களூரு-மதுரை வந்தேபாரத் ரெயில் சேவையில் சிறிய மாற்றம்செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"மதுரை-பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தேபாரத் ரெயில் (வண்டி எண்: 20671) கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.50 மணிக்கு வந்து மதியம் 12.52 மணிக்கு மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை (வியாழக்கிழமை) முதல் மதியம் 12.30 மணிக்கு வந்து மதியம் 12.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
அறிவிப்பு: மறுமார்க்கமாக பெங்களூரு கன்டோன்மென்ட்-மதுரை வந்தேபாரத் ரெயில் (20672) கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.55 மணிக்கு வந்து மதியம் 1.57 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக வருகிற 15-ந்தேதி முதல் மதியம் 1.43 மணிக்கு வந்து 1.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications