காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்.. ஹெச் ராஜா சவாலுக்கு வெங்கடேசன் எம்பி பதிலடி
மதுரை: 500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா.. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்.. அது தான் அறிவுடமை.. என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யைச் சேர்ந்தவரும் மதுரை எம்பியுமான சு வெங்கடேசன் கூறியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்விக்கான நிதி தருவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.தேசிய கல்விக் கொள்கையின் படி, மும்மொழியை ஏற்றால் மட்டுமே நிதி கிடைக்கும் என்பதால் இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை இந்தி திணிப்பு என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகிறது.ரயில் நிலையங்கள், தபால் நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை ஊற்றி அழிக்கும் போராட்டத்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுத்துள்ளன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் திமுகவினர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் மீது மட்டும் கறுப்பு பெயின்ட் பூசி அழித்துள்ளனர். இதேபோல் திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையிலும் ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் கருப்பு மை ஊற்றி சிலர் அழித்தனர். இதேபோல் பல்வேறு தபால் நிலையங்களிலும் கருப்பு மை ஊற்றி அழித்தனர்.
இதனிடையே திமுகவிற்கு பதிலடியாக, எச். ராஜா "500 ரூபாய் நோட்டில் இருக்கும் ஹிந்தியை முதலில் அழியுங்கள்; பார்க்கலாம்!" என்று சவால் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்தியை அழிக்க வேண்டும் என்றால், முதலில் சன் ஷைன் ஸ்கூலுக்கே போக வேண்டும். திமுகவில் உள்ளவர்கள் ஒருவராவது உப்பு போட்டு சாப்பிடுகிறவர் இருந்தால், முதலில் அந்த பள்ளிக்கு செல்லுங்கள். திமுகவில் மொத்தம் 48 சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளின் பட்டியலை நான் கொடுக்கிறேன். அந்த பள்ளிகளில் ஹிந்தி கற்று கொடுக்கலாமா என்று போராட்டம் நடத்துங்கள். முடிந்தால், 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்திய எழுத்துக்களை அழியுங்கள். நீங்கள் மானங்கெட்டவர்கள்!" இவ்வாறு ஹெச் ராஜா ஆவேசமாக கூறினார்.
இந்நிலையில் ஹெச் ராஜாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யைச் சேர்ந்தவரும் மதுரை எம்பியுமான சு வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுகிறார் ஹெச். ராஜா.. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்.. அது தான் அறிவுடமை" இவ்வாறு கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications