மதுரை மேற்கு தொகுதியை குறி வைக்கிறதா பாஜக? சட்டென வந்த கேள்வி.. மழுப்பிய செல்லூர் ராஜு!
மதுரை: மதுரை மேற்கு தொகுதியை குறி வைத்து திமுக மற்றும் பாஜக காய்களை நகர்த்தி வருவதாக எழுந்த கேள்விக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மழுப்பலான பதில் அளித்து சென்றிருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வந்த அமித் ஷா மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் செல்லூர் ராஜூ, அரசியல் கருத்துகள் பேச முடியாது என்று கூறி இருக்கிறார்.
அண்மையில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இம்முறை பாஜக தென் மாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது. அதற்காகவே பாஜக தலைமை முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமனம் செய்துள்ளது.

தென் மாவட்டங்கள் பாஜக
நாடாளுமன்றத் தேர்தலின் போதே கன்னியாகுமரி, நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 2வது இடத்தை பிடித்தனர். இதனால் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் மதுரை வந்த அமித் ஷா மதுரை தெற்கு, மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
மதுரை தெற்கு
மதுரை தெற்கு தொகுதியில் ஏற்கனவே செளராஷ்டிரா சமூக வாக்குகள் அதிகமாக உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் அதிகரித்திருந்தன. அதிமுகவை விடவும் பாஜக அதிக வாக்குகளை பெற்றிருந்தது. இதனால் மதுரை மாவட்ட பாஜகவில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது யார் என்ற போட்டி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்லூர் ராஜூ பேட்டி
அதுமட்டுமல்லாமல் மதுரை மேற்கு தொகுதி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடும் தொகுதி. இதனால் மதுரை மேற்கு தொகுதி பாஜகவுக்கு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ பேசுகையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா அல்லது அதிமுக ஆட்சியா என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.
குழப்பம் ஏற்படுத்தாதீர்கள்
அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு அறிவுறுத்தி உள்ளார். ஏற்கனவே கூட்டணி மற்றும் ஆட்சி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார். அண்ணாமலையின் கருத்து குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசுவார்.
மதுரை மேற்கு யாருக்கு?
மதுரை மேற்கு தொகுதிக்காக திமுக ஆட்சியில் என்ன செய்யப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள். அதனால் அமைச்சர் மூர்த்தி என்ன செய்கிறார் என்பதும் தெரியும். மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். சொந்த தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு செல்லூர் ராஜூ பதில் அளிக்கமால் மழுப்பி சென்றது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
-
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!











Click it and Unblock the Notifications