நான் மட்டுமா லஞ்சம் வாங்குறேன்.. தலையாரியே மூணு மாடி வீடு கட்டிட்டாரு.. மதுரை விஏஓவின் "பரபர" ஆடியோ
மதுரை: மதுரையை சேர்ந்த பெண்ணுக்கு கணவரால் கைவிடப்பட்டதற்கான சான்றிதழை வழங்குவதற்காக பெண் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ வெளியாவதற்கு முன்பாக இதுகுறித்த செல்போன் உரையாடலில், "நான் மட்டுமா லஞ்சம் வாங்குறேன்.. நம்ம தலையாரியே மூணு மாடி வீடு கட்டிட்டாரு" என கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அந்த பெண் விஏஓ பேசும் ஆடியோவும் வெளியாகியுள்ளது.
லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டதுடன் மட்டுமல்லாமல் அதை நியாப்படுத்தும் வகையில் பேசிய விஏஓ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கணவரால் கைவிடப்பட்ட பெண்
மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் அவர் கஷ்டப்பட்டு வந்துள்ளார். அப்போதுதான், அவருக்கு கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அரசாங்கம் நிதியுதவி செய்வது தெரியவந்தது. இதையடுத்து, கணவரால் கைவிடப்பட்டதற்கான சான்றிதழை வாங்க மேலமடை விஏஓ ரமணியை பஞ்சவர்ணம் அணுகியுள்ளார்.

லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ
ஆனால், விஏஓ ரமணியோ ரூ.250 லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் தருவேன் என கறாராக கூறியுள்ளார். மேலும், லஞ்சம் கேட்டு பல மாதங்களாக பஞ்சவர்ணத்தைஅவர் அலைகழித்தும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தனக்கு தெரிந்த தன்னார்வலர் ஒருவரிடம் பஞ்சவர்ணம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர், தன்னார்வலர் கொடுத்த யோசனையின் படி சில தினங்களுக்கு முன்பு விஏஓ ரமணியை
சந்தித்த பஞ்சவர்ணம், அவர் லஞ்சமாக கேட்ட 250 ரூபாயை அவருக்கு கொடுத்துள்ளார். இதனை அவர் அருகில் இருந்த தன்னார்வலர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார்.

'எல்லாத்துக்கும் லஞ்சம் வாங்குவீங்களாமே'
இதையடுத்து, அந்த வீடியோவை விஏஓ ரமணிக்கே அனுப்பிய தன்னார்வலர், அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அந்த ஆடியோ பதிவு தற்போதுவெளியாகியுள்ளது. அதில், "எல்லா விஷயத்துக்கும் நீங்க லஞ்சம் வாங்குவீங்களாமே.. லஞ்சம் கொடுக்கலனா உங்கட்ட ஒரு வேலையும் நடக்காதாமே.. எல்லாருமே அப்படிதான் சொல்றாங்க.. உங்க தலையாரி கூட அப்படித்தான்
சொல்றாரு" என அந்த தன்னார்வலர் கேட்கிறார்.

'நா மட்டுமா லஞ்சம் வாங்குறேன்'
அதற்கு பதிலளிக்கும் விஏஓ ரமணி, "நான் மட்டுமா லஞ்சம் வாங்குறேன். ஏன் அந்த தலையாரி வாங்குறதில்லையா.. தலையாரி லஞ்சம் வாங்காமலா மூணு மாடி வீடுகட்டிருக்காரு" என கூலாக கூறுகிறார். அப்போது தன்னார்வலர், "இந்த வீடியோவைமாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப் போறேன்" என சொல்ல.. சட்டென பம்மிய விஏஓ
ரமணி, "விடுப்பா., இந்த சின்ன விஷயத்த எல்லா பெருசா ஆக்கிட்டுஇருக்காதப்பா" என்கிறார். தற்போது இந்த வீடியோவும், சமூக வலைதளங்களில்வைரலாக பரவி வருகிறது.
-
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications