பேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு!
போலீசாரை கத்தியால் தாக்கி.. தப்பி ஓடிய கிரிமினலுக்கு வலை வீசப்பட்டுள்ளது
மதுரை: படக்கென போலீசாரின் கழுத்து, கைகளில் கத்தியால் கிழித்து விட்டு, டக்கென ஜீப்பில் இருந்து குதித்து தப்பி ஓடி உள்ளான் கிரிமினல் ஒருவன்!
மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் துரைப்பாண்டி என்கிற பாண்டி. வயது 26 ஆகிறது. மதுரை சுற்றுவட்டாரத்தில் கைதேர்ந்த திருடன்.

வழிப்பறி, டூவீலர் திருட்டு என ஏகப்பட்ட வழக்குகள் பாண்டி மீது உள்ளன. மதுரை தவிர, திருப்பூர், கோயம்புத்தூர் போன்று மாவட்டம் விட்டு மாவட்டமும் கைவரிசையை காட்டி உள்ளான் பாண்டி.
இதனால் இந்த மாவட்ட போலீசார், பல்வேறு வழக்குகளில் இவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இறுதியில் ஒரு திருட்டு வழக்கில் சூலூர் போலீசார் பாண்டியை சுற்றி வளைத்து கைது செய்துவிட்டனர்.
அவனை பிடித்து கொண்டு கோர்ட்டுக்கு செல்லும்போது, போலீசாரின் பிடியில் இருந்தே திடீரென ஓடும் ஜீப்பில் இருந்து குதித்து.. எஸ்கேப் ஆனான் பாண்டி. இதை போலீசார் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. அதனால் பாண்டியை போலீசாரும் விரட்டி பிடிக்க ஆரம்பித்தனர். அப்போது கையில் வைத்திருந்த கத்தியால், பாதுகாப்புக்கு வந்த போலீசாரை கழுத்து மற்றும் கைகளில் கிழித்து விட்டு பாண்டி தப்பி விட்டான்.
இதனால் பாண்டியை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக பாண்டியின் போட்டோக்களையும் வெளியிட்டு, "இவனை எங்கு பார்த்தாலும் பிடித்து எனக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று சொல்லி Tr. Balamurugan 9498102041,8072087450 என்ற எண்ணையும் பகிர்ந்துள்ளனர்.
போலீஸார் தேடி வரும் வேகத்தைப் பார்த்தால் துரைப்பாண்டியை சீக்கிரமே மாவுக்கட்டுக்குள் போய் தேட வேண்டி வரும் போல தெரிகிறது!
-
"அவங்கள கடிச்சு வை" கைது செய்ய வந்த போலீஸ்காரரை அலறி ஓடவிட்ட கன்னியாகுமரி கிருஷ்ணவேணி! என்ன நடந்தது -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications