'அண்ணனுக்கு நன்றி'.. செல்லூர் ராஜூவை கொண்டாடும் காங்கிரஸ் தலைவர்கள்.. ஒரே பதிவால் யூடர்ன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்று, ராகுல் காந்தியின் படத்தை தன்னுடைய எக்ஸ் தளத்தில் செல்லூர் ராஜூ பதிவிட்டதை பார்த்த மாணிக்கம் தாகூர் 'அண்ணனுக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார். மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் செல்லூர் ராஜூக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. பாஜக, பாமக, அமமுக, ஒபிஎஸ் உள்ளிட்டவை ஓரணியாகபோட்டியிட்டன. அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ போன்றவை ஓர் அணியாக போட்டியிட்டன. இந்நிலையில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தது.

Manickam Tagore says Thank you brother for Sellur Raju posting Rahul Gandhi s picture on X site

இந்த தேர்தல் முடிந்த பின்னர் அதிமுக நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. மத்தியில் அதிமுகவை யாரை ஆதரிக்கும் என்ற கேள்விகள் ஓடுகின்றன. காங்கிரஸை ஆதரிக்குமா அல்லது பாஜகவை ஆதரிக்குமா என்ற கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.. தனக்கு தோன்றிய விஷயங்களை சட்டென கூறிவிடுவார். கட்சி தலைமைக்கு தர்ம சங்கடம் ஏற்படும் நிலை செல்லூர் ராஜூன் பேச்சால் சில சமயங்களில் ஏற்பட்டது உண்டு. வைகை ஆற்றில் தெர்மாகோல் விட்டதில் தொடங்கி பல்வேறு விஷயங்களில் செல்லூர் ராஜூ பேசப்படும் நபராக அதிமுகவில் மாறினார்.

அதேநேரம் அதிமுக தலைமைக்கு இவரது பேச்சு அடிக்கடி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. 'மத்தியில் மோடி வந்தாலும், ராகுல் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' என்று கூறியதை கேட்டு அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார். இதேபோல் எம்.ஜி.ஆரைப் போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்ய நினைப்பவர் நடிகர் விஜய்' என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போது செல்லூர் ராஜூ வெளியிட்ட ராகுல் காந்தி வீடியோ அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்று, ராகுல் காந்தியின் படத்தை தன்னுடைய எக்ஸ் தளத்தில் செல்லூர் ராஜூ பதிவிட்டுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த செல்லூர் ராஜூ, முன்னாள் பிரதமரின் மகனாகிய ராகுலின் எளிமைக்காக சாதாரணமாக போட்ட பதிவுதான், வேறு ஒன்றுமில்லை என்று கூறினார். அட்மின் எல்லாம் போடவில்லை.. தானே போட்டதாகவும், இதில் ஒரு அர்த்தம் இல்லை என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்,.

இந்நிலையில் "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்று, ராகுல் காந்தியின் படத்தை தன்னுடைய எக்ஸ் தளத்தில் செல்லூர் ராஜூ பதிவிட்டதை பார்த்த விருதுநகர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 'அண்ணனுக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார். செல்லூர் ராஜூவிற்கு மேலும் சில காங்கிரஸ் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளார.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+