பொறுப்பு மாற்றத்துக்கு எதிர்ப்பு.. மேலூர் அரசு மருத்துவமனை டீன் தற்கொலை முயற்சி
Subscribe to Oneindia Tamil
மேலூர்: மதுரை மேலூர் அரசு மருத்துவமனையின் டீனாக உள்ள பிரியா தேன்மொழி தற்கொலை முயற்சி செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு மருத்துவமனை. இங்கு டீனாக இருப்பவர் பிரியா தேன்மொழி. இந்த நிலையில் இவரை அப்பொறுப்பிலிருந்து மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக ஏற்கெனவே டீனாக இருந்த ஜெயந்தியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரியா தேன்மொழிக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் இந்த பொறுப்பு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதையடுத்து அவரை மற்ற மருத்துவர்களும் ஊழியர்களும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications