மக்கள் காரி துப்பமாட்டார்களா? என்னை பழைய மூர்த்தியாக மாத்திடாதீங்க! அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர்!
மதுரை: ''என்னை பழைய மூர்த்தியாக மாத்திடாதீங்க'' என அரசு அதிகாரிகளை பொதுவெளியில் வைத்து அமைச்சர் மூர்த்தி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் பதவி வரும் போகும், ஆனால் அரசு அதிகாரிகளுக்கு அப்படியில்லை, ஓய்வு பெறும் காலம் வரை அவர்கள் எந்த ஊருக்கு மாற்றப்பட்டாலும் அவர்கள் அதிகாரிகள் தான். இதனால் தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளை முடிந்தவரை பகைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மதுரையில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் மூர்த்தி, பக்கத்தில் கலெக்டரை வைத்துக்கொண்டே, இப்படி புல்லும், புதரும் மண்டிக் கிடந்தால் மக்கள் காரி துப்ப மாட்டார்களா என அங்கிருந்த ஏ.இ.யிடம் எல்லோர் முன்னிலையிலும் கேட்டிருக்கிறார்.

அதேபோல் மின்வாரிய அதிகாரிகளை அலைபேசியில் தொடர்பு கொண்டு, ''ரேஷன் கடைக்கும், நூலகத்திற்கும் 2 நாட்களில் மின் இணைப்பு கொடுத்தாகணும், என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ தெரியாது, உங்க ஆட்களை வந்து பார்க்கச் சொல்லுங்க, என்னை பழைய மூர்த்தியாக மாத்திடாதீங்க, எனக்கு என்ன செய்றதுனே தெரியல'' என தாம் வகிக்கும் அமைச்சர் பதவியை மறந்து மிரட்டல் தொணியில் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.
பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதை அமைச்சர்களுக்கு எத்தனையோ முறை முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பொதுவெளிகளில் பேசும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும், வார்த்தைகளை கொட்டிவிடக் கூடாது என கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்திலும் சொல்லி வருகிறார். ஆனால் அவரது அறிவுரையை அமைச்சர்கள் கேட்டது போல் தெரியவில்லை.
மின் இணைப்பை 2 நாட்களில் கொடுத்துவிட வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கறார் காட்டியதை யாரும் குறை சொல்ல முடியாது. மக்களுக்காக தான் அவர் இப்படி அதிகாரிகளை விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார். ஆனால் அதே வேளையில் ''என்னை பழைய மூர்த்தியாக மாத்திடாதீங்க'' எனச் சொன்னால் என்ன அர்த்தம் என்பது தான் இங்கே சர்ச்சையாகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications