நடிகர்களுக்கு கூட்டம் கூடும்; ஆனால் அது ஓட்டாக மாறாது -செல்லூர் ராஜூ
மதுரை: நடிகர்களுக்கு கூட்டம் மட்டும் தான் கூடும் என்றும் அது எதுவுமே ஓட்டாக மாறாது எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக, பாஜக, என அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் அந்தந்த கட்சிகளை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பரப்புரை செய்ய தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நடிகர்கள் கூடும் கூட்டத்தை பார்த்து அது ஓட்டாக மாறும் என கருத வேண்டாம் எனத் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகை குஷ்புவுக்கு பெரியளவில் கூட்டம் திரண்டது என்றும் ஆனாலும் அந்த தேர்தலில் திமுகவால் ஜெயிக்க முடியவில்லை என்றார்.
குஷ்பு தற்போது பாஜகவில் இருக்கும் சூழலில் கூட்டணிக் கட்சி பிரமுகர் என்பதை மறந்து அவரை சீண்டும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இந்தக் கருத்தை கூறியிருக்கிறார். இவர் நடிகர் கமல்ஹாசனை மனதில் வைத்து இந்தக் கருத்தை கூறியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆரும், பொதுச்செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதாவும் நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications