Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயலில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. "ஐயா.. எந்த லோனும் கிடைச்சதே இல்லை".. புகார் சொன்ன விவசாய பெண்கள்

பாப்பாபட்டி விவசாய பெண்கள் முதல்வரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: "ஐயா, வாழ்வாதாரத்துக்கே எங்களுக்கு வழியில்லை.. எந்த லோனுமே எங்களுக்கு இதுவரை கிடைச்சதே இல்லை" என்று முதல்வர் ஸ்டாலினிடம் பாப்பாபட்டி விவசாய பெண்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஓராண்டுக்கு மேலாக கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இன்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராமப்புற பகுதிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த திமுக அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, இன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. காந்தி பிறந்தநாளையொட்டி மதுரை அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார்..

 பாப்பாபட்டி

பாப்பாபட்டி

மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மதுரை சென்றார்... முதல்வரின் கிராமசபை கூட்டத்தில் பொது மக்கள் திரண்டு வந்திருந்தனர்.. அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.. அப்போது, பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முதல்வரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

பாப்பாபட்டி கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி இருவழிப்பாதை அமைக்கவும் அதே கிராம சபையில் மற்றொரு கோரிக்கையை மக்கள் முன்வைத்தனர்.. இறுதியில் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, திமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.. திமுக தேர்தல் நேரத்தில் அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், பாப்பாபட்டியில் ரூ.23 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும் என்றும் உறுதி தந்துள்ளார்.

வசதிகள்

வசதிகள்

மேலும், பாப்பாபட்டியில் ரூ.48 லட்சம் மதிப்பில் மயானத்தில் மேம்படுத்தப்படுவதுடன், நியாயவிலைக்கடை, கதிர் அறுக்கும் களம், மேல்நிலைத்தொட்டி உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். முன்னதாக பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் வயலில் இறங்கி, முதல்வர் குறைகளை கேட்டார்... காரில் சென்று கொண்டிருந்த முதல்வர், பெண் தொழிலாளர்களை பார்த்ததுமே காரை விட்டு இறங்கினார்..

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

வயலில் இறங்கி, நாற்று நட்டு கொண்டிருந்த பெண்களிடம் நலம் விசாரித்தார்.. பிறகு, அவர்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டார்.. அப்போது பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கே வழியில்லை என்றும், எந்த லோனுமே இதுவரை தங்களுக்கு கிடைச்சதே இல்லை என்றும் புகார்களை முன்வைத்தனர்.. அதுமட்டுமல்ல, "இரவு நேரத்தில் ஒரு விளக்கு கூட இல்லை மிகவும் இருட்டாக இருக்கு.. எங்களுக்கு செல்லவே பயமா இருக்கு.. நீங்க தான் எங்களது குறையை தீர்த்து வைக்க வேண்டும்" என்று முதல்வரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Recommended Video

    புகார்கள் மீது உடனே ஆக்‌ஷன் எடுக்குறீங்களா? இரவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர்!
     வாக்குறுதி

    வாக்குறுதி

    பொறுமையாக நின்று அனைவரின் குறைகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், நிச்சயமாக உங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்" என உறுதியளித்து விட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு கூட்டத்துக்கு கிளம்பி சென்றார். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் இன்று பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+