இதுக்கு மட்டும் வராரோ? எட்டி கூட பார்க்காத எடப்பாடி! திடீரென காரை எடுத்து.. சீறும் அதிமுக தலைகள்
மதுரை: மதுரை வரும் பிரதமர் மோடியை வரவேற்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமான நிலைய செல்ல இருக்கிறார்.
பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். இதற்காக பாஜக சார்பாக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது பெங்களூர் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று மாலை 3 மணி அளவில் மதுரைக்கு வருகிறார். அங்கிருந்து விமான நிலையத்தில் ஹெலிகாப்படர் ஏறி திண்டுக்கல்லுக்கு வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலைய செல்ல இருக்கிறார்.

மோடி பார்க்க வருகிறார்
இதற்காக மோடி தரப்பில் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டு இருந்தார். அவரிடம் தனியாக பேச நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனியாக பேசுவதற்கு நேரம் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து விமான நாளையாட்டில் வரவேற்பு கொடுப்பதற்கு மட்டும் நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. பாஜக தலைவர்கள் சிலரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்க்க உள்ளனர்.

சென்னை வரவில்லை
முன்னதாக எடப்பாடி பழனிசாமி சென்னையில் மழை பெய்த போது சென்னைக்கு வராமல் சேலத்திலேயே இருந்தார். கடந்த வாரம் சென்னையில் மழை பெய்த போது, சென்னையே நீரில் மிதப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் வைத்தார். இது தொடர்பாக அறிக்கை மட்டுமே வெளியிட்டார். அவர் சேலத்தில்தான் இருக்கிறார். மழை சமயத்தில் அவர் சென்னைக்கே வரவில்லை. சென்னை பக்கமே வராமல் சென்னையில் நீர் இருப்பதாக அவர் பேசி இருந்தது பெரிய சர்ச்சையானது.

கோவையில் பார்வையிடவில்லை
அதேபோல் சேலத்தில் இருந்தாலும் அருகில் இருக்கும் கோவைக்கும் அவர் செல்லவில்லை. கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை பார்வையிட அவர் செல்லவில்லை. அங்கு மக்களை சந்தித்து பேசவும் அவர் செல்லவில்லை. மாறாக அவர் சேலத்திலேயே முடங்கினார். அதிமுகவினர் இடையே இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

பரமக்குடி வரவில்லை
முன்னதாக முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை கடந்த வாரம் நடந்தது . ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சென்று மரியாதை செய்தனர். ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக தலைவர்களும் இந்த நிகழ்விற்கு சென்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கும் செல்லவில்லை. சென்னையிலேயே தேவர் சிலைக்கு மரியாதை செய்தார்.

அப்செட்
இந்த நிலையில்தான் பிரதமர் மோடி நிகழ்விற்கு எடப்பாடி வருவது சர்ச்சையாகி உள்ளது. முக்கியமாக தேவர் அமைப்பினர் இடையே இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பரமக்குடியில் விழா நடந்த போது எடப்பாடி வரவில்லை. ஆனால் இப்போது மட்டும் அவர் மதுரைக்கு வருகிறார். இப்போது மட்டும் அவருக்கு நேரம் கிடைக்கிறதா என்று தென் மண்டல அதிமுகவினர், முக்குலத்தோர் பிரிவினர் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது.

விளக்கம்
ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சிலரிடம் இதை பற்றி கேட்ட போது அவர்கள் வேறு சில விஷயங்களை தெரிவித்தனர். தேவர் ஜெயந்தியின் போது எடப்பாடிக்கு எதிராக போராட்டம் செய்ய ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முயன்றனர். அதை தவிர்க்கவே எடப்பாடி பழனிசாமி பரமக்குடி செல்லவில்லை. மற்றபடி இன்று அவர் மதுரைக்கு செல்வது பாரத பிரதமரை வரவேற்க்க வேண்டும் என்பதற்காக. அதில் என்ன தவறு இருக்க முடியும், என்று விளக்கம் அளித்து உள்ளனர்.
-
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications