தயவுசெஞ்சு கிளம்புங்க..என் மகன வச்சு அரசியல் பண்ணாதீங்க! காலில் விழுந்து கதறிய பூர்ண சந்திரனின் தாய்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தீக்குளித்து உயிரிழந்த பூரண சந்திரன் உடல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கூடிய பாஜகவினர் போராத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உடற்கூறு ஆய்வு உள்ளிட்டவை முடிவடைந்ததால் தனது மகனின் உடலை பெற்றுக் கொள்வதாகவும், தயவுசெய்து பாஜகவினர் உள்ளிட்ட இந்து அமைப்பினர் பிரச்சினை செய்ய வேண்டாம் என உயிரிழந்த பூரண சந்திரனின் தாயார் கண்ணீர் மல்க கதறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி நேற்று முன் தினம் மதுரை தல்லாங்குளம் அவுட் போஸ்ட் பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்தில் இளைஞர் பூர்ண சந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது குடும்பத்தினரும் உறவினரும் கூடியுள்ளனர். இந்த நிலையில் பூரணசந்திரனின் உடலை அரசு மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்
நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த உடற்கூராய்வு 10.15 மணிக்கு முடிந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயற்சித்தனர். அப்போது அங்கு திரண்ட பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் அந்த பகுதியை சுற்றிலும் சுமார் 500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் மற்றொரு பாஜக பிரிவினர் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் தொடங்கினர்.
பூரண சந்திரன் தீக்குளிப்பு
மேலும், பின்னர் மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு திரண்ட அவர்கள், "பூரணசந்திரனுக்கு வீரவணக்கம்", திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் பூர்ண சந்திரன் உடலை இன்று அவர்களது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு செய்து அதற்கான ஆவணங்களை கையெழுத்து பெற்றனர். பூரண சந்திரனின் தாயாரும் உடலை பெற்றுக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார்.
பாஜக போராட்டம்
இதற்கிடையே பூர்ண சந்திரன் மறைவையொட்டி ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை காவல்துறையினர் கிழித்ததாக கூறி பாஜகவினர் மீண்டும் உடற்கூறு ஆய்வு அறை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மகனின் உடலை பெற்றுக் கொள்ள தாங்கள் சம்மதம் தெரிவிப்பதாகவும், வேறு யாரும் பிரச்சினை செய்ய வேண்டாம் தயவு செய்து கிளம்புங்கள் என அவரது தாய் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தாய் கதறல்
காவி துண்டு அணிந்திருந்த ஏராளமானோர் உடற்கூறு ஆய்வு அறை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், " எனது மகனை நல்ல முறையில் அடக்கம் செய்ய வேண்டும். தயவு செய்து யாரும் பிரச்சனை செய்ய வேண்டாம். அரசு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது நாங்கள் உடலை பெற்று கொள்ள முடிவெடுத்துவிட்டோம். தயவு செய்து நீங்கள் என் மகன் உடலை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என பூரண சந்திரனின் தாயாரும் அவரது உறவினர்களும் கட்சியினரை வலியுறுத்தினர். இதை அடுத்து வேறு வழியின்றி அங்கிருந்து பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கிளம்பினர். இதை அடுத்து பூரண சந்திரனின் உடல் அவரது பெற்றோரும் ஒப்படைக்கப்பட்டது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications