நரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு வைக்கவில்லை.. மதுரை ஷாக்!
2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார்
மதுரை: மதுரையில் குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது.. அத்துடன் தங்கள் வீட்டு நாயையும் விட்டு வைக்காமல், அதற்கும் விஷம் வைத்து கொன்றுள்ள சம்பவம் நிலைகுலைய வைத்து வருகிறது!
மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் அருண்.. இவரது மனைவி பெயர் வளர்மதி.. அகீதா, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இவர்களுக்கு உள்ளனர்.
இந்நிலையில், அருணுக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.. சிகிச்சை தந்தும் காப்பாற்ற முடியாத சூழலில் 5 மாசத்துக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

அருண்
இதனால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போய்விட்டது.. வளர்மதியும், 2 பெண்களும், அவர்களின் சொந்தக்காரர் ஆதரவில்தான் வளர்ந்து வந்தனர்.. ஆனால், அருண் குடும்பத்துக்கு ஏற்கனவே கடன் பிரச்சனை இருக்கிறது.. அருண் இறந்ததும், அந்த கடனை அடைக்க முடியாமல் வளர்மதி படாத பாடு பட்டு வந்தார்.

கடன் பிரச்சனை
ஒருபக்கம் கணவனின் இறப்பு, இன்னொரு பக்கம் கடன் பிரச்சனை என சிக்கி தவித்து வந்த நிலையில், கடைசியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.. அதை மகள்களிடம் சொல்லவும், அவர்களும் மரணத்துக்கு தயாரானார்கள்.. முன்னதாக, தன் வீட்டில் இருந்த தம்பி மகள் மேகலா என்ற சிறுமியை, கீழ் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார் வளர்மதி. அதன்பிறகு தாங்கள் செல்லமாக வளர்த்த நாய்க்கு சாப்பாட்டில் விஷம் வைத்தனர்.. அந்த நாய் காஸ்ட்லி நாயாம்.. சாப்பாட்டை சாப்பிட்டதுமே, அது பரிதாபமாக சுருண்டு விழுந்து இறந்துவிட்டது.

மகள்கள்
பிறகு தங்களது குடும்ப போட்டோவை எடுத்து வைத்து கொண்டு, தாயும், 2 மகள்களும் பார்த்து பார்த்து கதறி அழுதனர்.. இறுதியில், அந்த போட்டோவுக்கு தாங்களே பூ வைத்து வழிபாடு செய்து இறுதி அஞ்சலியும் செலுத்தினர்.. இதையடுத்து, கை நரம்புகளை பிளேடால் 3 பேரும் வெட்டிக் கொண்டனர்.. ஆனால் ரத்தம் தான் கொட்டியதே தவிர, ஒருத்தர் உயிரும் போகவில்லை.. எனவே, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, ஒரே கம்பியில் 3 புடவைகளை மாட்டினர்.. அதில் ஆளுக்கொரு புடவையில் 3 பேரும் ஒரே நேரத்தில் தூக்கு மாட்டி தொங்கிவிட்டனர்.

வளர்ப்பு மகள்
இதன்பிறகுதான் போலீசுக்கு விஷயம் தெரிந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது ஒரு கடிதம் எழுதி உள்ளார் வளர்மதி.. அதில், கணவனின் மறைவு தங்களை அளவுக்கு அதிகமாக பாதித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.. மேலும் வளர்ப்பு மகளான அந்த சிறுமியை கொல்ல தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், அதற்கு மனசும் வரவில்லை என்றும் , அதனால்தான் தற்கொலைக்கு முன்பு, அந்த குழந்தையை மட்டும் கீழ் வீட்டில் தூங்க வைத்து விட்டு வந்ததாகவும் எழுதியிருந்தார்.

உருக்கம்
அதுமட்டுமல்ல, தங்களின் சொத்துக்களை வைத்து அந்த சிறுமியை பாதுகாக்குமாறும் அந்த கடிதத்தில் உருக்கமாக வளர்மதி தெரிவித்திருக்கிறார். இந்த தற்கொலை விஷயம் கேள்விப்பட்டவுடனேயே மதுரை மாவட்ட எஸ்பி சுஜித் குமார் நேரில் வந்து விசாரணையை நடத்தினார். ஒத்தக்கடை போலீசாரும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவத்தினால் மதுரையே உறைந்து போய் கிடக்கிறது!
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications