“என் உயிருக்கு ஆபத்து.. முதல்வரை சந்திக்கணும்”.. உருக்கமாக கோரிக்கை வைத்த மதுரை திமுக நிர்வாகி!
மதுரை: "என் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளால் என்னால் வெளியில் நடமாட முடியவில்லை, எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிரது. முதல்வர் ஸ்டாலினை என்னைச் சந்தித்து எனது குறைகளை கூறவேண்டும்" என மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி. இவருக்கு அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டி குடும்பத்தினருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் முன்விரோதம் மற்றும் கொலை வழக்கு காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் மதுரை கிழக்கு ரயில் நிலையம் அருகே உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய வி.கே.குருசாமி, "மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு பேசிக்கொண்டிருந்த போது என்னை குண்டர் வழக்கில் கைது செய்தனர். 2016 ஆம் ஆண்டில் ஓபுலா படித்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக வழக்கு போட்டனர். இதுபோன்று பல பொய் வழக்குகளை போலீசார் என்மீது பதிவு செய்துள்ளனர். ஆனால் பெங்களூரில் என்னை வெட்டியவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது நான் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிரது. எனவே, எனக்கு பாதுகாப்பு வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தேன். அதன்பேரில் போலீசார் எனக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். ஆனால், எப்போது வேண்டுமென்றாலும் பாதுகாப்பை நீக்குவோம் என காவல்துறையினர் மிரட்டுகின்றனர். எனது உறவினர்கள் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கூட எனது உறவினர் மகனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு எனது குடும்பத்தில் நடைபெற்ற காதணி விழாவை நடத்த விடாமல் தடுத்தனர். பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து விழா நடைபெற்றது. அப்போதும் என்னை கைது செய்து, இந்த விழாவில் கிடைத்த பணத்தையெல்லாம் போலீசார் எடுத்துச் சென்றுவிட்டனர்.
2001-ல் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுகவில் சீட் வழங்காததால், சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றேன். 2011 தேர்தலில் நானும் எனது மகளும் வெற்றி பெற்றோம். என் மீது தவறு இருந்தால் மக்கள் எப்படி என்னை மீண்டும், மீண்டும் தேர்வு செய்வார்கள். இப்போதும் நான் பொதுமக்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன்.
தற்போது கூட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எங்கள் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். இந்த பகுதியில் திமுகவை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், என்னை அழிக்க திட்டமிட்டு, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் சட்டத்தை மீறி போக மாட்டேன்.
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முன்பு, கலைஞர் கருணாநிதி இருக்கும்போது, இது போன்று கட்சியினர் பாதிக்கப்பட்டால், உடனே கூப்பிட்டு கேட்பார். எனவே, நான் எங்கள் தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்திக்க வேண்டும். அவரிடம் என்னுடைய கோரிக்கைகளை கூற வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். என்னால் முடியவில்லை. எனவே, அவர் என்னை அழைத்து எனது கோரிக்கைகளை கேட்டு எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.
-
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications