ஆட்சியில் பங்கு..திருமாவளவனுக்கு வந்த தைரியம்! ஆனால்..இதனை கண்டிப்பாக செய்யணும்! நாதக சீமான் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருமாவளவனுக்கு வந்த தைரியத்தை பாராட்டுகின்றேன். ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். திருமாவளவன் உடைய கருத்தை நான் ஆதரிக்கின்றேன் ஏற்கின்றேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மதுரை முடக்குச்சாலை பகுதியில் இருக்கக்கூடிய மாஸ்டர் மஹாலில் நாம் தமிழர் கட்சியின் மதுரை மண்டல கலந்தாய்வுக் கூட்டம் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

seeman thirumavalavan ntk

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,” விருதுநகர் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கலந்தாக கூட்டம் நடத்தி வருகிறோம். இமானுவேல் சேகரன் மற்றும் முத்துராமலிங்க தேவர் உடைய ஜெயந்தி விழா உள்ளிட்டவைகள் உள்ளதால் அந்த பகுதிகளில் கூட்டம் நடத்த முடியவில்லை.

ஜனநாயக நாட்டில் ஒரு கருத்து பதிவு செய்யக்கூடாது...என்றால் என்ன? அன்னபூர்ணா நிறுவனத்தின் உரிமையாளர் கூறக்கூடிய கருத்திற்கு பதில் கூறாமல் அவரை உடனடியாக வரவழைத்து அவரை வருத்தம் தெரிவிப்பது தான் ஜனநாயகமா? அன்னபூர்ணா தொழிலதிபருக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுடைய நிலை என்ன? வீடியோ வெளியீடு குறித்து அண்ணாமலை வருத்தம் தெரிவித்ததை பாராட்டுகின்றேன்.

தேர்தல் நேரத்தில் மட்டும் கட்ச தீவு குறித்து பேசுவது எந்த வகை? குஜராத் பீகார் பகுதியில் வெள்ளம் என்றால் உடனடியாக ஓடோடி வரும் இவர்கள், தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் இவர்களுடைய நிலை என்ன என்பதை விளக்க வேண்டும். இந்த நாட்டின் குடிமகனை எந்த தைரியத்தில் நம்மை அவன் தொடுகின்றான்.

ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசிய, திருமாவளவனுக்கு வந்த தைரியத்தை பாராட்டுகின்றேன். ஆட்சி மற்றும் அதிகாரம் - இந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். திருமாவளவன் உடைய கருத்தை நான் ஆதரிக்கின்றேன் ஏற்கின்றேன். 2026 ஆம் இந்திய ஆண்டில் ஆட்சியை அமைக்கப் போகிறவர்களுக்கான கருத்தை அவர் சொல்லுகிறார் என நான் நினைக்கின்றேன். இந்த நிலைப்பாட்டில் திருமா நிலையாக இருக்க வேண்டும்.

மது ஒழிப்பு மாநாட்டிற்கு தற்போது வரை அழைப்பு இல்லை. அவர் அந்த பக்கம் என்றால் நான் இந்த பக்கம் எதிர்த்து போராட போகின்றேன். மது ஒழிப்பு குறித்து ஏற்கனவே போராடிவரும் பாமக தலைவரை ஏன் அழைக்கவில்லை. தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஈர்ப்பு குறித்து எங்களுக்கு உடன்பாடு இல்லை. முதலீடு வருகிறது - எதில் முதலீடு செய்யப் போகிறார்கள். ஒரு டன் கார் தயாரிக்க தண்ணீர் மற்றும் தடை இல்லாமல் மின்சாரம் தேவைப்படுகிறது. இது அனைத்தையும் தமிழக அரசு வழங்குகிறது.

Ford நிறுவனம் ஏற்கனவே இங்கே இருந்தது. 7,000ம் கோடிக்கு மேல் வரக்கூடிய முதலீட்டாளர்கள் எங்கே நிறுவனத்தை கொண்டு வருவார்கள். ஏழை விவசாயிகளின் விவசாய நிலத்தை பிடுங்கி அன்னிய நாட்டினருக்கு கொடுக்க போகின்றார்கள். 31, லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்றால் - இதில் வேலை வாய்ப்பு யாருக்கு கிடைக்கும். வேளாண்மையை முன்னிறுத்தி பொருளாதாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நான் களத்தில் இறங்குகின்றேன்” என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+