கட்டும் போதே சரிந்து விழுந்த மதுரை மேம்பாலம்.. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி ஆக்ஷன்
மதுரை: மதுரையில் மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாகத் தேசிய நெடுஞ்சாலைத்துறை முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
Recommended Video
மதுரை நத்தம் சாலையில் மதுரை செட்டிகுளம் இடையே பிரம்மாண்டமான பறக்கும் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ஊழியர்கள் அங்கு வழக்கம் போலக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

மதுரை
அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்பவர் உயிரிழந்தார்.

மோசமான விபத்து
Hydraulic பணிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதலில் கூறப்பட்டது. நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் மேம்பாலத்தில் அருகே தொழிலாளிகள், அல்லது பொதுமக்கள் யாரும் இல்லை. இல்லையென்றால் இந்த மோசமான விபத்தால் உயிரிழப்பு அதிகரித்து இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலம், கட்டும்போதே, இடிந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அபராதம்
இது எதிர்பாராத வகையில் நடந்த விபத்தா அல்லது மோசமான கட்டுமான பொருட்களால் ஏற்பட்ட விபத்தா என்ற சந்தேகங்களும் பொதுமக்களிடையே ஏற்பட்டது. இது தொடர்பாகத் தேசிய நெடுஞ்சாலைத்துறையும் விசாரணை நடத்தியது. இந்நிலையில், மதுரையில் மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாகக் கட்டுமான நிறுவனத்துக்கு ₹3 கோடி அபராதம் விதித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

கட்டுமான பணிகள்
மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலம் 7 கிலோமீட்டர் நீளம் உடையது. மத்திய - மாநில அரசுகளின் கூட்டாக இணைந்து மேற்கொண்டு வரும் இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியை மற்றொரு பகுதி உடன் இணைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்ட போது தான் விபத்து நிகழ்ந்தது
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications