மதுரை, தேனியில் செல்போன், பிரியாணி கடைகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
மதுரை: மதுரை மற்றும் தேனியில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (என்.ஐ.ஏ) அதிரடி சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்தவர் அப்துல்லா. இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் மதுரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அப்துல்லாவுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனையடுத்து அப்துல்லாவின் வழக்கை என்.ஐ.ஏ.வசம் மதுரை போலீசார் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் மதுரை புதூரில் அப்துல்லா வீட்டில் அதிகாலை 5 மணி முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் தேனி மாவட்டம் சின்னமனூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த ஒருவர் மதம் மாறி சின்னமனூரில் பிரியாணி மற்றும் செல்போன் கடை நடத்தி வருகிறார். அவர் தடைசெய்யப்பட்ட அல்-உம்மா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இன்று காலை 5 மணியளவில் இருந்து சின்னமனூர் தேரடி பகுதியில் உள்ள அவரது கடை மற்றும் சில பகுதிகளில் தேசிய புலனாய்வு போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications