ஓபிஎஸ் சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. திருப்பரங்குன்றம் எங்கள் கோட்டை: தாக்கும் தங்க தமிழ்செல்வன்
மதுரை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சாடியுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கிடைக்கும் கேப்பில் எல்லாம் விளாசி வருகிறார் அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன். ஓபிஎஸின் வாரணாசி பயணத்தை விமர்ச்சித்து சர்ச்சையாக்கினார்.
அதைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஓபிஎஸ் தனது குடும்பத்தோடு பாஜகவில் இணைவார் என்று கூறி குண்டைத் தூக்கிபோட்டார். இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஓபிஎஸ் அமைதிகாக்க வேண்டும்
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அம்மாவின் அதிமுக என்பது அமமுக தான், தொண்டர்கள் அமமுக பின்னால் உள்ளனர், அதைபுரிந்துகொண்டு ஓபிஎஸ் அமைதி காக்க வேண்டும்.

அமமுகவின் கோட்டை
திருப்பரங்குன்றம் அமமுகவின் கோட்டை, அமமுகவை பார்த்து ஈபிஎஸ் ஓபிஎஸ் பயப்படுவது ஏன்? வாக்குபதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்பை பார்த்து அமமுகவை பார்த்து திமுக அதிமுக அஞ்சுகிறது, ஈவிஎம் இயந்திரத்தை மாற்றுவதற்கான முயற்சி நடந்தாலும் அதை ஆண்டவன் தான் காப்பற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது.

மகனுக்கு மட்டும் வாய்ப்பு
ஓபிஎஸ் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்தவர் அம்மாவிற்கு எதிராகவே தேர்தல் வேலை பார்த்தவர். ஓபிஎஸ் சந்தர்ப்பவாத அரசியல்வாதி, ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்களுக்கு எதையும் செய்யவில்லை. மகனுக்கு மட்டும் வாய்ப்பு வாங்கி தருகிறார்.

ஏன் பதில் இல்லை?
அதிமுக தொண்டன் காவி வேட்டி கட்டிகொண்டு பாஜகவோடு சேர்ந்திருப்பதை ஏற்றுகொள்ளமாட்டார்கள். ஓபிஎஸ் வாரணாசி விவகாரத்தில் ஏன் ஈபிஎஸ் பதில் அளிக்கவில்லை, பொள்ளாச்சி விவகாரத்தில் ஏன் பதில் அளிக்கவில்லை?

சந்தேகமாக உள்ளது
மக்கள் புரிந்துகொண்டு அமமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே அமமுகவிற்கு ஆதரவு தருகின்றனர். வாக்குபதிவு முடிந்தபின் முன்னுபின் முரணாக அதிமுக, திமுகவினர் தாங்கள் ஜெயிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து மாற்றி மாற்றி பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நம்பிக்கையை இழக்கிறது
தேனி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கோடி கோடியாக பணம் வழங்குவது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணைய அதிகாரிகளாக மாநில ஆட்சியின் அதிகாரிகளே உள்ளனர் என்பதால் நம்பகத்தன்மையை இழக்கிறது. இவ்வாறு தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications