அந்தப் பக்கம் எடப்பாடி ஆலோசனை கூட்டம்.. “அது கும்பல்”.. பட்டென சொன்ன ஓபிஎஸ்! மீண்டும் புரட்சி பயணமா?
மதுரை: கூடிய விரைவில் மீண்டும் புரட்சி பயணம் தொடங்க உள்ளேன் என்றும், இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுவது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அல்ல, அது கும்பல் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தனது புரட்சிப் பயணத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த 3ஆம் தேதி காஞ்சிபுரம் களியனூர் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 10 ஆயிரம் பேருக்கும் மேல் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை முன்பு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

களியனூர் கிராமத்தில் இந்தப் பொதுக்கூட்டம் தொடங்கியது முதலே மழை பெய்யத் தொடங்கியது. எனினும், புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மழையையும் பொருட்படுத்தாது மேடைக்கு வந்து சேர்ந்தார். ஆனால், மழை காரணமாக கூட்டம் கலைந்ததால் புரட்சிப் பயண பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மதுரையை போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மதுரை நாகமலை புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொண்டர்களின் விருப்பப்படி விரைவில் மீண்டும் புரட்சி பயணம் தொடங்க உள்ளேன். உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் என் பயணத்தை ஆரம்பிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இன்று எடப்பாடி பழனிசாமி நடத்தும் மா.செக்கள் கூட்டம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்று நடைபெறுவது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அல்ல, அது கும்பல் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், பாரத் பெயர் மாற்றம் பற்றிய கேள்விக்கு, பெயர் மாற்றம் குறித்த முழுமையான முறையான அரசாணை வரட்டும், அதன்பிறகு அது பற்றி பேசலாம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications