நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. மதுரை ஆவின் சேர்மனாக பதவியேற்றார் ஓ.ராஜா!
மதுரை ஆவின் சேர்மனாக ஓ.ராஜா பதவியேற்று கொண்டார்.
மதுரை: பல்வேறு குழப்பங்கள், சர்ச்சைகள், பரபரப்புகளுக்கு பிறகு மதுரை ஆவின் சேர்மனாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பதவியேற்றார்.
கடந்த 20-ம் தேதி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தலைவருக்கான பதவிக்கு ஓ.ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அதிகப்படியான வாக்குகளை பெற்று முறைப்படி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

செல்லூர் ராஜூ
இந்த பதவியேற்பு விழா மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டதுடன், ஓ.ராஜாதான் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

டிஸ்மிஸ்
அதோடு ராஜாவுக்கு பொன்னாடைகளை போர்த்தி, கைகுலுக்கி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். பிறகு தொண்டர்களின் உற்சாக வரவேற்பும் நடந்தது. ஆனால் பதவியேற்ற கொஞ்ச நேரத்திலேயே அவர் அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

விமர்சனங்கள்
இது அதிமுக உள்ளிட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்காக டிஸ்மிஸ் என்பதில் பல கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் கட்சிக்குள் ஓ.ராஜா சேர்த்து கொள்ளப்பட்டார்.

பதவியேற்றார்
இதற்கு மன்னிப்பு கோரியதால் அவரை மீண்டும் சேர்த்து கொண்டோம் என கட்சி தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆவின் தலைவராக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்ட ஓ.ராஜா இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

பதவியேற்பு
இந்த பதவியேற்பு நிகழ்ச்சி மதுரை ஆவின் அலுவலகத்தில் எளிய முறையில் நடைபெற்றது. அன்றைய பதவியேற்பின்போது அமைச்சர் முதல் முக்கிய தலைகள் பங்கேற்ற நிலையில், நடந்த ஓ.ராஜாவின் மறுபதவியேற்பு நிகழ்ச்சியில் அதிமுக முன்னணியினர் யாருமே பங்கேற்கவிலை.

டிஸ்மிஸ்
முதல் பதவியேற்பு, டிஸ்மிஸ், மீண்டும் கட்சிக்குள் இணைப்பு, மறு பதவியேற்பு... என தேனி மாவட்டத்தில் இன்னமும் ஓ.ராஜா பரபரப்பு குறையாமல் உள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications