முருகன் மாநாட்டுக்கு வர இருந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விமானத்தில் கோளாறு! மதுரை வர தாமதம்
மதுரை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மதுரைக்கு வர இருந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட தாமதம் ஆகியுள்ளது.
மதுரையில் இன்று மாலை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வருகை தருகிறார். இதற்காக அவர் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார்.

இந்த நிலையில், பவன் கல்யாண் புறப்பட இருந்த தனி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் அவர் மதுரைக்கு தாமதமாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை பாண்டி கோயில் அம்மா திடல் பகுதியில் இன்று மாலை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ள நிலையில், அதனை பின்பற்றி மதியம் 3 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 8 மணி வரை மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைப்பில் பின்னணியில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை இருப்பது போன்ற வடிவில் பிரம்மாண்டமான முருக கடவுள் கையில் வேலுடன் நிற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆயிரம் இருக்கைகளுக்கும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு திடலில் தற்காலிக குடிநீர் டேங்குகள் மற்றும் தற்காலிக கழிவறைகள் உள்ளிட்டவைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை 6 மணிக்கு இரண்டு லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம் பாடும் நிகழ்வு நடைபெறவுள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு கடந்த 6 தினங்களாக மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் அருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று மதுரை வருகிறார். தனி விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருவதாக இருந்தது.
ஆனால், பவன் கல்யாண் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட இருந்த தனி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் அவர் மதுரைக்கு தாமதமாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை வரும் பவன் கல்யாண், திருப்பரங்குன்றம் முருகன், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து நேராக முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். தற்போது, பவன் கல்யாண் வரும் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஆகியுள்ளதால் அவர் மதுரையில் சாமி தரிசனம் செய்யும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications