Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடமானத்தில் 300 பவுன் நகை மோசடி: மதுரையில் தேடப்பட்டவரின் அம்மா! பொங்கல் பரிசு பெற வந்தபோது ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது... அங்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பழைய மோசடி விவகாரம் வெடித்து கிளம்பி, அந்தப் பகுதி முழுவதையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.... அது என்ன தெரியுமா?

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது இரும்பாடி என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம்.. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் நகை அடகுக் கடை நடத்தி வந்தார்.

Pledge Gold Jewellery 300 Sovereign Gold Madurai 300

300 சவரன் தங்க நகை

"நம்பிக்கையானவர், ஊருக்கே தெரிந்த முகம்" என்ற பெயரில், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், பெண்கள் என பலரும் அவரிடம் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றனர். பலர் ஜீவானந்தமிடம் மாதம் மாதம் சீட்டு கட்டியும் வந்தனர்.

ஆனால், 2017ம் ஆண்டு, யாருக்கும் எந்த தகவலும் சொல்லாமல், ஜீவானந்தம் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.. அதாவது பொதுமக்களின் ஏலச்சீட்டு பணம் மற்றும் சுமார் 300 பவுன் நகைகளுடன் திடீரென தலைமறைவாகிவிட்டார்.. இதனால் இரும்பாடி கிராம மக்களே கடும் அதிர்ச்சி அடைந்தனர்..

பொங்கல் பரிசுத் தொகுப்பு

அதன்பின் ஜீவானந்தத்தை பல வழிகளில் தேடினார்கள்,.. ஆனால் அவரை பற்றின எந்த தகவலும் யாருக்கும் கிடைக்கவில்லை... தங்கள் பகுதியிலேயே குடியிருக்கிறார் என்பதால் நகையும் பணமும் தந்தோமே? என்று கதறி புலம்பினார்கள்... எங்கு போய் அவரை தேடுவது என்றும் தெரியாமல், மனவேதனையுடன் அப்படியே இந்த மோசடி சம்பவத்தையும் விட்டுவிட்டார்கள்... ஆனால் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் இரும்பாடி கிராம மக்களுக்கு போகவில்லை.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ரூ.3 ஆயிரம் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது... அந்தவகையில் இரும்பாடி கிராம ரேஷன் கடையிலும் நேற்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.

ஜானகியை சுற்றி வளைத்த மக்கள்

அப்போது, திடீரென ஜீவானந்தத்தின் தாயார் ஜானகி (75), காரில் வந்து இறங்கினார்.. பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரேஷன் கடைக்கு வந்திருந்தார்.. உடனே அவரை அடையாளம் கண்ட சில பெண்கள், "இவர் ஜீவானந்தத்தின் அம்மா" என்று சத்தமாக சொன்னார்கள்.. இதனால் நகை, சீட்டு பணத்தை இழந்த பொதுமக்கள் அனைவருமே ஒன்றாக திரண்டுவிட்டனர்...

ஜானகியைச் சுற்றிவளைத்து பிடித்தனர். "எங்கள் நகை எங்கே?", "உன் மகன் எங்கே?" எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.. இதனால் அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது.. அதற்குள் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நகை கிடைத்தாக வேண்டும்

சோழவந்தான் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஜானகியை பத்திரமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறாரகள்.. ஆனால், எக்காரணம் கொண்டும் ஜானகி அம்மாவை விடுவிக்கக்கூடாது, ஜீவானந்தம் வந்தே ஆகவேண்டும், தங்களுடைய பணம், நகை திரும்ப கிடைத்தே ஆக வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட பெண்கள், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

அவர்களை சமாதானம் செய்த போலீசார், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி தந்தனர்.. பொங்கல் தொகுப்பை வாங்க வந்த அம்மா, இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லையாம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+