ஸ்டாலின் அறிவித்தது ஏழு வாக்குறுதிகள் அல்ல; ஏமாற்றும் வாக்குறுதிகள்... போட்டு தாக்கிய பொன்னார்!
மதுரை: திருச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் அறிவித்தது ஏழு வாக்குறுதிகள் அல்ல ஏமாற்று வாக்குறுதிகள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிக்கும் பாஜக, 20 தொகுதிகளையும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பெற்று விட்டது.
குமரி மக்களவை தொகுதியில் முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கால் பதிக்க விரும்பும் பாஜக
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக, தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இந்த முறை எப்படியாவது தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிக்கும் பாஜக, 20 தொகுதிகளையும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பெற்று விட்டது. குமரி மக்களவை தொகுதியில் முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக விரும்பும் தொகுதிகளை கேட்கிறது
கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சட்டமன்ற தொகுதிகளை பொறுத்தவரை அதிமுக விரும்பும் தொகுதியையே பாஜக கேட்டு வருவதாக கூறப்படுகிது. மக்கள் மத்தியில் வேல் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் முருகனின் ஆறுபடை வீடுள்ள தொகுதிகளை பாஜக எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்த நிலையில் குமரி மக்களவை தொகுதியின் வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை திருமங்கலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் சமீபத்தில் திருச்சி மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஏழு வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- 'எல்லாருக்கும் இரண்டு இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் என்று சொன்னார்களே, உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.

தி.மு.கவின் ஏமாற்று வாக்குறுதிகள்
தமிழகததில் நான்கு முறை முதல்வராக இருந்த கருணாநிதி ஐந்தாவது முறையாக வெற்றிபெறுவதற்காக 2 ஏக்கர் நிலம் தருவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். மக்கள் இந்த அறிவிப்பினால் ஈர்க்கப்பட்டு ஓட்டு போட்டார்கள். கருணாநிதியும் வெற்றி பெற்று முதல்வரானார். ஆனால் முதல்வராக பொறுப்பேற்ற கருனாநிதி, 'அனைவருக்கும் 'கொடுக்கும் அளவிற்கு இவ்வளவு நிலம் தமிழகத்தில் இல்லை என்பது இப்பொழுதான் தெரிகிறது' என்று சொன்னார். இதைவிட கேவலமான பொய் ஏதாவது இருக்க முடியுமா? எனவே மு.க.ஸ்டாலின் அறிவித்தது ஏழு வாக்குறுதிகள் அல்ல ஏமாற்று வாக்குறுதிகள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?











Click it and Unblock the Notifications