மதுரை டூ சென்னைக்கு 8 பெட்டியுடன் மெமு ரயில்.. குஷியில் தென் மாவட்டம்.. இதுதான் பொங்கல் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் சர்ப்ரைஸ் தகவல்களை வந்தே பாரத் & தென்னக ரயில்வே தந்துள்ளது.. நெல்லை, மதுரை ரயில்களில் இன்றுமுதல் சிறப்பு மாற்றங்கள் நடந்துள்ளது.. இந்த நடவடிக்கையானது, ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.. தற்போதுள்ள 8 பெட்டிகளுடன் 16 பெட்டிகளை இணைப்பதால், பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதுடன், ரயில்வே துறைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

madurai chennai

நெல்லை மகிழ்ச்சி: இந்நிலையில், பயணிகளின் கோரிக்கைகள் உடனடியாக ஏற்கப்பட்டுள்ளது.. அதன்படியே இன்று முதல் நெல்லை எக்ஸ்பிரஸில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது.

தென்மாவட்ட பயணிகளுக்கு பொங்கல் பரிசாக 16 பெட்டிகளோடு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், அதற்கான முன்பதிவுகளும் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டன. நாளை மறுநாள் 17ம் தேதி காலையில் சென்னைக்கு செல்வோர் மற்றும் 19ம் தேதி ஞாயிற்றுகிழமை சென்னைக்கு செல்ல, ரிசர்வேஷன்களும் நடந்து முடிந்துள்ளன.. பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சிறப்பு ரயில்கள்: இந்நிலையில், மதுரையிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று மற்றொரு சர்ப்ரைஸ் வந்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

"பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை செல்வோரின் வசதிக்காக இன்று அதாவது ஜனவரி 15ம் தேதி, இரவு 7:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் 8 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் (06164) நாளை அதிகாலை 3:20 மணிக்கு எழும்பூர் செல்லும். திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் வழியாக இயக்கப்படும்.

ஜனவரி 18 காலை 10:45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் 8 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் (06061) இரவு 7:15 மணிக்கு மதுரை வரும். ஜனவரி 19 மாலை 4:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் மெமு சிறப்பு ரயில் (06062) மறுநாள் அதிகாலை 12:45 மணிக்கு எழும்பூர் செல்லும்.

ஏசி பெட்டிகள்: ஜனவரி 19 மாலை 4:25 மணிக்கு துாத்துக்குடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06168) விருதுநகர், மதுரை, திருச்சி, செங்கல்பட்டு வழியாக மறுநாள் அதிகாலை 3:45 மணிக்கு தாம்பரம் செல்லும். 7 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+