சித்திரை திருவிழாவுக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கரண்ட் கொடுக்க முடியாது! - மதுரை மாநகர ஆணையர்
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் ரூ.1 கோடி வரை மின் கட்டணம் நிலுவை வைத்திருப்பதாகவும், எனவே சித்திரை திருவிழாவுக்கு கோயில் நிர்வாகத்திற்கு மின்சாரம் வழங்க முடியாது என்றும் மதுரை மாநகர ஆணையர் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு பக்கதர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறர்கள். அவர்கள் அளிக்கும் காணிக்கை எங்கே போனது? என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டின் அடையாளங்களில் முதன்மையானது மீனாட்சி அம்மன் கோயில். தென் மாவட்டங்களின் மையமாகவும் மதுரை இருக்கிறது. இந்த மதுரைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்கிறார்கள்.
உலகமே வியந்து பார்க்கும் இந்த திருவிழாவுக்கான தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன. இன்னும் கொஞ்ச நாட்களில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருவிழாவுக்கு கோயில் நிர்வாகத்திற்கு மின்சாரம் வழங்க முடியாது என மாநகர ஆணையர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கும் காணிக்கைகள் எல்லாம் எங்கே? திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கடைகளிலிருந்து வசூலிக்கப்படும் பணம் எங்கே? என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உண்மையில் கோயிலில் என்னதான் நடக்கிறது? கோயிலுக்கு மின்சார கட்டணம் வழங்கும் அளவுக்கு கூட வருமானம் வரவில்லையா? மதுரையின் அடையாளத்தையே அழிக்கப்பார்க்கிறீர்களா? என்று பக்தர்கள் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications