Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு எதிராக ஓபிஎஸ்.. 10% இடஒதுக்கீடு.. தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும், தொண்டர்கள் தன் பக்கம் என்று ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து பேசி வருகிறார்.

அதேபோல் டெல்லி மேலிடத்தின் ஆதரவை யார் பெறுவது என்பதில் இரு தரப்பிலும் முழுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கேற்ப தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தனியாக சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பார்க்கப்பட்டது.

தமிழக அரசியல்

தமிழக அரசியல்

ஆனால் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவரும் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனியாக சந்திக்கவில்லை. இதனால் வழக்கம்போல் இருவரும் தனித்தனியாக இயங்கி வருகின்றனர். இதனிடையே சென்னை கனமழை, உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீராய்வு மனு

சீராய்வு மனு

குறிப்பாக 10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. இதனால் பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக செயல்படுவதாக பல்வேறு கட்சியினரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர் செல்வத்திடம் 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓபிஎஸ் தரப்பில், உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித விவகாரத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இதனை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார்.

திருப்திகரமான சந்திப்பு

திருப்திகரமான சந்திப்பு

தொடர்ந்து பிரதமர் மோடி இபிஎஸ் உடன் மட்டுமே பேசியதாக ஆர்பி உதயகுமார் கூறிய கருத்து பற்றிய கேள்விக்கு, ஆர்பி உதயகுமார் சொன்னது உண்மையா, பொய்யா என்பது என் அருகில் இருந்தவர்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் ஆதரவாளர்கள் யாரும் மன வருத்தத்தில் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். அதேபோல் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோருடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்று தெரிவித்தார்.

வெவ்வேறு கருத்துக்கள்

வெவ்வேறு கருத்துக்கள்

10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் ஜெயக்குமார் ஆதரவாக அறிக்கை வெளியிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கருத்து கூறாமல் மவுனம் காத்து வருகிறார். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தமிழக அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜக ஆதரவாக பேசி வரும் நிலையில், ஓபிஎஸ் சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+