இன்று இரவு சென்னை வருகை.. நாளை திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் மோடி.. பயண விவரம் முழு விவரம்
மதுரை: தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையல் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். இன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை புதுச்சேரி செல்கிறார். அதன்பிறகு அங்கிருந்து தஞ்சை வழியாக மதுரை செல்கிறார். மதுரையில் நாளை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்கிறார். பின்னர் மாலையில் மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. இதில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். தற்போது இரண்டாம் கட்டமாக வருகிற 1ம் தேதி புதுச்சேரி, மதுரை என இரண்டு இடங்களில் நடைபெற போகிறது. இதில் பிரதமர் மோடி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்க போகிறார்கள். இதற்காக இன்று இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வருகிறார். கிண்டி ராஜ்பவனில் இன்று இரவு பிரதமர் மோடி தங்குகிறார்.

பின்னர் நாளை காலையில் புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். பின்னர் அதனை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஒய்வெடுக்கும் பிரதமர், பின்னர் சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு செல்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். அந்த வரவேற்பிற்கு பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வான கட்டுபபாட்டு கோபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் காணொலி காட்சி வாயிலாக மதுரையில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார். அதேபோல் ராமேஸ்வரம் செல்லும் சாலையான பரமக்குடி -ராமநாதபுரம் சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றுவது உள்பட பல்வேறு மத்திய அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் மாலை 4 மணி அளவில் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் செல்கிறார். அங்கு முருக பெருமான தரிசனம் செய்யும் பிரதமர் மோடிக்கு கும்பம் மரியாதை கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்படுகிறது. பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை 4.30 மணி அளவில் மதுரை மண்டேலா நகர் சுற்றுசாலை பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்படபல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி, பிரதமர் மோடி செல்லும் திருப்பங்குன்றம் கோவில் உள்பட பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட எல்லைக்குள் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆள் இல்லா வான்வழி வாகனங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்படடுள்ளது. மீறி ட்ரோனை பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications