கையில் மல்லிகைப்பூவுடன் ஓட்டு போட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்! ஏன்? அவரே சொன்ன பதில்
மதுரை: மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளரும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் இன்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அப்போது அவர் வாக்குச்சாவடிக்கு வரும் போது கையில் மல்லிகைப்பூ சுற்றி வந்திருந்தது கவனம் பெற்றது. மேலும் ஓட்டு போடுவதற்கு கையில் ஏன் மல்லிகைப்பூவுடன் வந்தார் என்பதற்கு தக் லைஃப் பதில் ஒன்றையும் தெரிவித்தார்.
மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாரஜன் போட்டியிடுகிறார். மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர் சி போட்டியிடுகிறார்.

கையில் மல்லிகைப்பூ சுற்றியபடி
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே சுந்தர் சி போட்டியிடுகிறார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில், மதுரை மத்திய தொகுதி வேட்பாளரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கினை செலுத்தினார்.
வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்த வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கையில் மல்லிகைப்பூவை சுற்றியிருந்தது கவனம் பெற்றது. அமைச்சர் பிடிஆரை பொறுத்தவரை கையில் இரண்டு வாட்ச் கட்டியிருப்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
மல்லிகைப்பூ எதற்காக?
ஆனால் இன்று அவர் மல்லிகைப்பூவை கையில் சுற்றியபடி வந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில் இன்று மல்லிகைப்பூவுடன் வந்தது ஏன்?, எப்போதும் இப்படி வர மாட்டீங்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:- "மதுரக்காரன்..'' என்று கூறினார். மேலும் மல்லிகைப்பூவை சுற்றி இருந்த கையை உயர்த்தி காட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications