Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடம்பரமாக மகனுக்கு திருமணம்! கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ! மன சஞ்சலத்தில் அமைச்சர் மூர்த்தி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா, ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடத்திய திருமணத்துடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.

2,000 ஆடுகள், 5,000 கோழிகள், 100 கோடி செலவு என ஆளாளுக்கு ஒரு தகவலை பரப்பி வருவதால் அதனை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் அமைச்சர் மூர்த்தி தவித்து வருகிறாராம்.

மேலும் ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார்களோ என இப்போது சிந்திக்கத் தொடங்கியிருக்கிறாராம் அமைச்சர் மூர்த்தி.

 அமைச்சர் மூர்த்தி

அமைச்சர் மூர்த்தி

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று மதுரையில் நடைபெற்றது. சுமார் 1 லட்சம் பேருக்கு அசைவ விருந்து வைத்து அசத்திய அமைச்சர் மூர்த்தி, இயக்குநர் சங்கர் திரைப்பட பாணியில் திருமண விழாவை மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடத்தினார். இதனை கண்ட திமுக சீனியர் அமைச்சர்களே புருவம் உயர்த்தி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

சீனியர் அமைச்சர்

சீனியர் அமைச்சர்

மூத்த அமைச்சர் கே.என்.நேருவே தனது இல்லத் திருமண விழாவை அண்மையில் ஆர்ப்பாட்டமின்றி சென்னையில் நடத்திய நிலையில் ஜூனியர் அமைச்சரான மூர்த்தி தனது மகனுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அமைச்சர் மூர்த்தி என்ன ராஜா வீட்டு பரம்பரையில் வந்தவரா, அவருக்கு எங்கிருந்தது வந்தது இவ்வளவு பணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வினவியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தை தாங்கள் சும்மா விடமாட்டோம் என எச்சரித்திருக்கிறார்.

சுதாகரன் திருமணம்

சுதாகரன் திருமணம்

இது போதாதென்று ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடத்திய திருமணத்துடன் அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழா ஒப்பிட்டு பேசப்படுகிறது. சமூக வலைதளங்கள், ஊடகங்கள் என எங்கு பார்த்தாலும் தனது இல்லத் திருமண விழாவை பற்றித் தான் பேசுகிறார்கள் என்பதால் அமைச்சர் மூர்த்தி கடந்த 2 நாட்களாக சற்று மன சஞ்சலத்தில் இருக்கிறாராம். ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார்களோ என இப்போது சிந்திக்கிறாராம்.

யூகங்கள் அடிப்படையில்

யூகங்கள் அடிப்படையில்

இதனிடையே நேற்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மூர்த்தி, யூகங்கள் அடிப்படையில் தனது இல்லத் திருமணத்தை பற்றி தகவல்கள் பரவி வருவதாகவும் கட்சிக்குள்ளேயே சில புல்லுருவிகள் தான் இந்த வேலையை பார்ப்பதாகவும் கவலை தேய்ந்த குரலில் கூறியிருக்கிறார். தாம் எது செய்தாலும் அது கட்சிக்கு வலிமை சேர்க்கும் வகையிலேயே இருக்கும் எனவும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+