திரிஷாவிற்காக திறந்த விஜய் வீட்டு கதவு.. திருப்பதியிலிருந்து நேராக நீலாங்கரை பங்களா உள்ளே நுழைந்தார்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குள் திரிஷா சென்றுள்ளார். இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் திருப்பதிக்கு சென்றுவிட்டு தற்போது விஜய் வீட்டிற்கு வந்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையில் திரிஷா கலந்து கொண்டார். கோயில் வளாகத்தில் அவர் நடந்து சென்ற போது ரசிகர் ஒருவர், "மேடம், ரிசல்ட்டு பக்கா மனதே" (இன்று ரிசல்ட் பக்காவா நம் பக்கம்தான்) என்று சொன்னார். இதனை கவனித்த திரிஷா பதிலுக்கு புன்னகைத்துவிட்டு சென்றார்.

நடிகை திரிஷா இன்று (மே 4) தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, அவர் நேற்று இரவு திருப்பதிக்கு சென்று இன்று காலை ஏழுமலையானைத் தரிசனம் செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே நாளில் அவர் சாமி தரிசனம் செய்தது, தவெகவின் வெற்றிக்காகவே இருக்குமோ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நீலாங்கரை இல்லம் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள்
தவெக தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லம் தற்போது கட்சித் தொண்டர்களால் சூழப்பட்டு ஒரு மாநாடு நடக்கும் இடத்தைப் போலக் காட்சியளிக்கிறது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ரேஞ்ச் ரோவர் காரில் வந்த நடிகை திரிஷா, விஜய்யின் வீட்டுக்குள்ளே சென்றுள்ளார். ஏற்கனவே விஜய் மற்றும் திரிஷா குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், இவர்களின் பெயர்கள் தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளன.
தவெக சுமார் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், விஜய்யின் இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தல் முடிவுகள் விஜய்க்குச் சாதகமாக அமையும் பட்சத்தில், திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை! விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? முக்கிய அறிவிப்பு வெளியாகிறது -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி











Click it and Unblock the Notifications