மதுரை அருகே என்கவுண்டரில் ரௌடி சுபாஷ் சுட்டுக் கொலை! சேஸிங் செய்த போலீசாரை தாக்கியதால் பயங்கரம்!
மதுரை: மதுரை அருகே போலீஸ் என்கவுண்ட்டரில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரவுடி சுபாஷ் சந்திரபோஸ், துரத்திப் பிடிக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்துள்ளார்.
மதுரையில் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடைய நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் ரவுடி காளீஸ்வரன் 4 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். தமது வீட்டிற்கு வெளியே வந்த காளீஸ்வரனை 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் காளீஸ்வரன் துடிதுடித்து உயிரிழந்தார்.
முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். ரௌடி சுபாஷ் சந்திரபோஸ் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் கண்டறிந்தனர்.
இந்நிலையில் ரவுடி காளீஸ்வரன் கொலையில் தேடப்பட்டு வந்த ரௌடி சுபாஷ் சந்திரபோஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை பிடிக்கச் சென்ற போது, சுபாஷ் தன்னை துரத்திப் பிடிக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது தற்காப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சுட்டதில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்துள்ளார்.
-
பிச்சை எடுத்த காசில்.. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.6 கோடி வழங்கிய.. மதுரை யாசகர்! சுவாரசிய தகவல் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications