தீபாவளி கறி சோறு.. ஆடுகள் விற்பனை அமோகம்.. ரூ. 20 கோடியை அள்ளிய வியாபாரிகள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 20 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடுவார்கள் என்பதால் ஆட்டுக்கறி விற்பனை அதிகரிக்கும். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆட்டுச்சந்தைகளில் வியாபாரம் களை கட்டியது.

தீபாவளி பண்டிகை நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து கொண்டு இட்லி, கறிக்குழம்பு சமைத்து சாப்பிடுவது பலரது வீடுகளில் வழக்கம். பிற்பகல் நேரத்தில் பிரியாணி, சுக்கா செய்வார்கள். அன்றைய தினம் மட்டும் கிலோ கணக்கில் மட்டன், சிக்கன் என்று வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள்.

Sales of goats are huge Rs. 20 crore traders on Diwali

தீபாவளி நாளில் அசைவ கடைகளில் நள்ளிரவு முதலே வியாபாரம் களை கட்டும். விடிய விடிய ஆட்டுக்கறி, கோழிக்கறி விற்பனை கடைகளில் வரிசையில் காத்திருந்து மட்டன், சிக்கன் என்று அப்பா வாங்கி வர.. அம்மாவிற்கு சமையல் அறையில் மசாலா அரைத்து பக்குவமாக சமைக்க நேரம் சரியாக இருக்கும். இட்லியில் கறிக்குழம்பு, ஈரல் வறுவல் என தட்டில் அம்மா வைத்து கொடுப்பதை ரசித்து ருசித்து சாப்பிடுவதான் பிள்ளைகளின் வேலையே.

நாளை மறுநாள் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் கடந்த 2 நாட்களாகவே ஆட்டுச்சந்தைகளில் ஆடுகளின் விற்பனை களை கட்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடப்பது வழக்கம். இந்தச் சந்தைக்கு உளுந்தூர்பேட்டை மட்டுமல்லாது சுற்று வட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

திருச்சி, மதுரை, தேனி, சேலம், கடலூர், விழுப்புரம் உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

ஆடுகளின் ரகம், தரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய் 3 ஆயிரம் முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை விற்பனையானது. சந்தை தொடங்கி 3 மணி நேரத்திலேயே, ரூபாய் 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், ஆடுகள் வர, வர வாங்கிச் சென்றனர். மொத்தமாக ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வாரச் சந்தை ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.

அய்யலூரில் நேற்று வியாழக்கிழமை ஆட்டுச் சந்தை கூடியது. அதிகாலை 3 மணி முதலே ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் சந்தையில் குவிந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் இல்லாததால் சந்தைக்கு வெளியே சாலை வரை கூட்டம் அலைமோதியது. மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்த போதிலும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆட்டுச்சந்தைகளில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு ஆடு, கோழிகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+