செட்டில்மென்ட் பத்திரம்.. இப்படியெல்லாம் நடக்குமா? தான பத்திரத்தில் அசிங்கப்பட்ட மதுரை சார் பதிவாளர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடந்த மோசடியில் 7 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. என்ன நடந்தது?

ஒருவர் தன்னுடைய சொத்துக்களை, தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு பிரித்து எழுதி வைக்கப்படுவதுதான் செட்டில்மென்டு பத்திரம் எனப்படும். இது தானமாகவோ, பரிசாகவோ கொடுப்பதாகும்..

Settlement Deed Gift Deed Madurai

ஒரு நபர், தன்னுடைய பெயரில் உள்ள சொத்தை குடும்ப உறுப்பினர்கள் யார் பெயருக்கு வேண்டுமானாலும் தான பத்திரம் அல்லது செட்டில் மென்ட் பத்திரம் வழங்கலாம்.

தான பத்திரம்: அதேபோல, ஒருவர் தானமாக கொடுக்கும் செட்டில்மெண்ட் பத்திரத்தை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது.. அதுபோல ரத்து செய்யும் பத்திரமும் விற்ற சொத்தையும் திரும்ப வாங்கவும் முடியாது. ரத்து செய்யும் செட்டில்மெண்ட் பத்திரங்கள் கோர்ட்டுக்கு போகும்பொழுது, நீதிமன்றமும் அதை செல்லாது என்று அறிவித்துவிடுகிறது.

எத்தனையோ சூழல்கள் காரணமாக, சில பெற்றோர்கள், செட்டில் மென்ட் பத்திரம் வாயிலாக, வாரிசுகளுக்கு சொத்தை தந்து விடுகிறார்கள். வாரிசுகளும் அந்த சொத்தை வாங்கிக்கொண்டு, பெற்றோரை கவனிக்காமலும், கண்டுகொள்ளாமலும் நடுத்தெருவில் விட்டுவிடுகிறார்கள்..

செட்டில்மென்ட்: எனவே, தான் பாடுபட்டு சம்பாதித்த சொத்தை, அந்த செட்டில்மென்ட் பத்திரத்தை, ரத்து செய்ய வழியிருக்கிறதா? என்றும் ஆதங்கத்துடன் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அத்துடன் இதில் ஏற்படும் மோசடிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. இதையடுத்து "சட்ட விதிகளுக்கு உட்பட்டு" வருவாய் துறையும் இதில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எனினும், தான செட்டில்மென்ட்டில் மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. இப்போதுகூட மதுரையில் ஒருவர் சிக்கியிருக்கிறார்.. மதுரை கோச்சடையை சேர்ந்தவர் அமுதா..இவரது சகோதரர் சந்தோஷ்குமார். இவர் சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார்.

பிசினஸ்: எனினும், தொழில் அபிவிருத்திக்காக அமுதா வசித்து வரும் வீட்டை, அடமானம் வைக்க முயன்றிருக்கிறார்.. ஆனால், அமுதாவும், அம்மா சீனியம்மாளிடம் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. குடியிருக்கும் வீட்டை அடமானம் வைக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார்கள்.

இதனால், போலி ஆவணம் ஒன்றை தயாரித்து, தனக்கு தான செட்டில்மென்ட் கொடுத்ததாக, சந்தோஷ்குமார் பத்திரப்பதிவு ஒன்றை தயார் செய்தார்... அந்த பத்திரத்தை வைத்து தனியார் நிதி நிறுவனத்தில், 20 லட்சம் ரூபாய் கடனையும் பெற்றுவிட்டார்.. ஆனால், சந்தோஷ்குமாரால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால், தனியார் நிதி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியதுடன், விவகாரம் கோர்ட் வரை சென்றது.. இறுதியில், வீட்டை ஜப்தி செய்யும்படி உத்தரவு வந்தது.

சார் பதிவாளர்: அப்போதுதான், சந்தோஷ்குமார் மோசடியில் ஈடுபட்டு 20 லட்சம் கடன் வாங்கியது அமுதாவுக்கும், சீனியம்மாளுக்கும் தெரியவந்தது.. இந்த மோசடியில் சார் பதிவாளர் ஒருவரும் ஈடுபட்டிருப்பது அம்பலமானது.

அமுதாவும், தாயும் போலீசில் இதுகுறித்து புகார் செய்ததன் அடிப்படையில், சந்தோஷ்குமார், நண்பர்கள் கோபால், ஹரிஹரன், பத்திர எழுத்தர் இதயசந்திரன், சார் - பதிவாளர் மணிவாசகம் உட்பட 7 பேர் மீது, மோசடி உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாளுக்கு நாள் மோசடி வழக்குகளில் அதிகாரிகளே கைதாகி வருவது தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+