கூரியரில் வந்த மனைவியின் போட்டோ! அதிர்ச்சியில் மதுரை கணவர்.. சிக்கிய சைக்கோவின் பகீர் பின்னணி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தபால்தந்தி நகரில் ஒரு தம்பதிக்கு வந்த அந்த மர்ம கூரியர், வெறும் பார்சல் கிடையாது. அது ஒரு பெண்ணின் கண்ணியத்தையே சிதைக்கக்கூடியதாக அமைந்திருந்தது. இது அந்த வீட்டின் நிம்மதியை ஒரே நொடியில் தரைமட்டமாக்கி விட்டது.. இந்த பார்சலை அனுப்பியது யாரென்ற போலீசாரின் அதிரடி வேட்டையில் அந்த அதிர்ச்சி உண்மையும் வெளிவந்துள்ளது. அப்படி என்னதான் நடந்து மதுரையில்?

மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார் அநத் 37 வயது மதிக்கத்தக்க பெண்.. இவர் திருமணமானவர்.. தன்னுடைய கணவருடன் இணைந்து ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

madurai courier news wife photo scandal psycho relative shocking tamil news viral story tamil family scandal

கூரியரில் வந்த மனைவியின் அந்த போட்டோ

மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்தத் தம்பதியினரின் வாழ்க்கையில், கடந்த மார்ச் 26ம் தேதி வந்த ஒரு மர்மமான கூரியர் பார்சல் வந்தது.. அந்த பார்சலை கணவர் வாங்கி பிரித்து பார்த்தபோது, அதில் இருந்தவற்றை கண்டு ஒரு செகண்டு ஆடிப்போய்விட்டாடர்.. அந்த கொரியரில் மனைவியின் அரை நிர்வாண போட்டோ போட்டோகக்கள் இருந்தன.. அதாவது அந்த பெண் உடை மாற்றும்போது, யாரோ இதை ரகசியமாக போட்டோ எடுத்துள்ளார்கள்.

வெறும் போட்டோக்கள் மட்டுமல்லாமல், அந்த பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சில அவதூறான ஆபாச வாசகங்களும் அதில் எழுதப்பட்டிருந்தன..

அதிர்ச்சியில் மதுரை கணவர்

குறிப்பாக, ஆட்டோ டிரைவராக பணியாற்றி வரும் அந்த பெண்ணின் உறவினர் ஒருவருடன் அவரை தவறாக சம்பந்தப்படுத்தி, ஆபாசமான குறிப்புகள் அதில் இடம் பெற்றிருந்தன. இதை பார்த்து தம்பதி இருவருமே அதிர்ச்சியில் உறைந்தனர்.. இந்த கொரியர், அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், குடும்ப ரீதியான குழப்பங்களையும் ஏற்படுத்தியது. இது குறித்து அந்தப் பெண் உடனடியாக மதுரை போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த தபால்தந்தி நகர் பெண்ணின் குடும்பப் பின்னணி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போதுதான் விசாரணையில் பலவித பகீர் தகவல்கள் வெளியாகின.. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது சித்தி மகள்களுக்கும் இடையே ஏற்கனவே குடும்ப பகை இருந்து வந்ததாம்... இதை பயன்படுத்தி, தம்பதியை பிரிக்க திட்டமிட்டுள்ளார்கள்..

யாரந்த சைக்கோ - பகீர் பின்னணி

எனவே சித்தி மகள்களில் ஒருவரது கணவரே, அந்த பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை திருட்டுத்தனமாக சேகரித்து, அதனை அவர் கணவருக்கு பார்சலில் அனுப்பி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.. சொந்த குடும்பத்தில் உள்ள பெண்ணையே, பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்ட அந்த நபரை போலீசார் இப்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இப்படித்தான் 2 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியிலும், கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டு, அவரது தாலிச் சரடு பார்சல் மூலம் கணவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது நினைவிருக்கலாம்.

குடும்ப வன்முறைகள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய வன்முறைகள் சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகின்றன. அத்துடன் தம்பதியினருக்கு இடையே நிலவ வேண்டிய பரஸ்பர புரிதல் குறைந்து வருவதும், சிறுசிறு குடும்பப் பூசல்களைக் கையாளத் தெரியாமல் வன்முறையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருவதும் வருத்தத்தை தந்து வருகிறது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரது அந்தரங்கத்தை சிதைப்பதும், உயிரைப் பறிக்கும் அளவுக்குத் துணிவதும் கலாச்சார சீரழிவின் உச்சமாக கருதப்படுகிறது. மதுரையில் உறவினரே செய்த இந்த வக்கிரம் நிறைந்த செயல், குடும்பங்களுக்குள் இருக்கும் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+