Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாய் டூ மாமியார் வீடு.. தங்க பிஸ்கெட்டுடன் போன மருமகன்.. அதன்பிறகுதான் ட்விஸ்ட்! பரபரத்த வேப்பூர்

Subscribe to Oneindia Tamil

மதுரை : கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே தங்க பிஸ்கட் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும், தங்க பிஸ்கட்களுடன் தப்பிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Recommended Video

    துபாய் டூ மாமியார் வீடு.. தங்க பிஸ்கெட்டுடன் போன மருமகன்.. அதன்பிறகுதான் ட்விஸ்ட்! பரபரத்த வேப்பூர்

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தே.பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த பாலையா என்பவர், கடந்த எட்டு மாதம் முன்பு துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சரியான வேலை கிடைக்காததால், எட்டு மாதம் வேலை இல்லாமல் இருந்துள்ளார்.

    இதனால் எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று அவர் இருந்த நிலையில், துபாயில் இருக்கும் ஒருவர், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறியுள்ளார். மேலும், நான் கொடுக்கும் பார்சலை, தனது நண்பரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாலையாவிடம் அவர் கூறியுள்ளார்.

    மதுரை விமான நிலையம்

    மதுரை விமான நிலையம்

    அதன் பேரில் பாலையா கடந்த 14ஆம் தேதி துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது, துபாய் நண்பர், குறிப்பிட்ட அந்த நபர் விமான நிலையத்திற்கு பெட்டியை வாங்க வரவில்லை. இதனால், பாலையா மதுரையிலிருந்து கடலூர் மாவட்டம் கறிவேப்பலங்குறிச்சி அருகே உள்ள பேரலையூர் கிராமத்தில் உள்ள மாமியார் ராணி வீட்டிற்கு போயுள்ளார். பின்னர் பாலையா கொண்டு வந்த அந்தப் பெட்டியை மாமியாரிடம் கொடுத்து, நான் வந்து கேட்கும் வரை யாரிடமும் கொடுக்க கூடாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    பெட்டியை வாங்க வந்த நபர்கள்

    பெட்டியை வாங்க வந்த நபர்கள்

    இந்நிலையில், துபாயில் பார்சல் கொடுத்து மதுரையில் வாங்கி கொள்வதாக கூறியிருந்த நபர்கள், பாலையா வீட்டிற்கு சென்று அவர் மனைவி முத்துலட்சுமிடம் கேட்டுள்ளனர். அவர் தனது கணவர் இன்னும் வரவில்லை என்று கூறி, அவர்களை திசை திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நபர்கள் மதுரை விமான நிலையத்திற்கு சென்று, அங்குள்ள கார் ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவர்கள் வாடகைக்குச் சென்ற இடத்தை காட்டியுள்ளனர்.

    தங்க பிஸ்கட்டுடன் தப்பிய கும்பல்

    தங்க பிஸ்கட்டுடன் தப்பிய கும்பல்

    இதனையடுத்து அங்கு சென்று ராணியிடம் அந்த கும்பல் பெட்டியை கேட்டுள்ளனர். அதற்கு ராணி, தனது மருமகனின் சொந்த ஊருக்குச் சென்று பெட்டியை வாங்கி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். பின்னர், ராணி மற்றும் அவரது உறவினர் மற்றும் அந்த கும்பலுடன் பெட்டியை ஏற்றிக்கொண்டு பாலையாவின் சொந்த ஊரான தே.புடையூர் அருகே சென்றுள்ளார். அப்போது நடுவழியிலேயே ராணி மற்றும் உறவினரிடம் இருந்து பெட்டியை பிடுங்கிய அந்த கும்பல், அதிலிருந்த தங்க பிஸ்கட்டை எடுத்துக் கொண்டு, அவர்களை சாலையில் இறக்கிவிட்டு, காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

    காவல் நிலையத்தில் புகார்

    காவல் நிலையத்தில் புகார்

    இதனால் அதிர்ச்சியடைந்த ராணி மற்றும் அவரது உறவினர், இதுகுறித்து வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில், வேப்பூர் போலீசார் தே.புடையூர் கிராமத்தில் இருந்த அதே கும்பலைச் சேர்ந்த 5 பேரை பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை செய்தனர். பின்னர் பாலையாவிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பாலையா உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தப்பியோடிய நான்கு பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+