நாட்டையே விற்றுவிடுவார்கள் போல.. மதுரை ரயில்வே மைதானத்தை தாரைவார்க்க சாலமன் பாப்பையா கடும் எதிர்ப்பு
மதுரை: மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்தியக்கத்தில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா கையெழுத்திட்டிருக்கிறார். இரயில்வே சொத்து தனியாருக்கல்ல, மக்களுக்கானது. போகிற போக்கைப் பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. இதை அனுமதிக்ககூடாது" என்று சாலமன் பாப்பையா கூறினார்.
மதுரை அரசரடியில் ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதை கண்டித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை கடந்த வாரம் துவங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், மதுரை ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.

இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1600 கோடிக்கும் அதிகமாகும். இந்த மைதானம் மதுரையைச் சேர்ந்த பல்லாயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கி உள்ளது. இந்த மைதானத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ரயில்வே காலனி பகுதியில் 1550 மரங்கள் உள்ளன. மதுரை மாநகராட்சி முழுவதும் இருக்கும் மரங்களின் எண்ணிக்கையை விட ரயில்வே காலணி பகுதியில் இருக்கும் மரங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் ஆகும்..
மதுரை மக்களுக்கு சுவாசிக்க தகுந்த சுத்தமான காற்றையும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இந்த மைதானம் மற்றும் மரங்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால் தான் இந்த இடத்தை மதுரையின் நுரையீரல் என்று அழைக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு இடத்தை தற்போது தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது என்பது மதுரைக்கே மிகப்பெரும் தீங்கிழைக்கும் செயலாகும். இதனை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்குகிறோம்" இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.
இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மதுரையைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மதுரையில் வசிக்கும் மக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சியில் இடதுசாரிகள் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்தவரும், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளரும் முன்னாள் தமிழ் பேராசிரியரும், தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையா, மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்த வீடியோவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் எம்.பி சு. வெங்கடேசன். அதில் தனது கையெழுத்தை பதிவு செய்து, தமிழறிஞர் சாலமன் பாப்பையா கூறி இருப்பதாவது: "மதுரை ரயில்வே மைதானத்தில் சில நேரங்களில் எங்கள் பிள்ளைகள் சென்று விளையாடுவார்கள். என்னால் அங்கு போக முடியவில்லை என்றாலும், தற்போது முதியவர்கள் பலரும் காலை வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருவதை நான் பார்க்கிறேன்.
மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்தியக்கத்தில் தமிழறிஞர் சாலமன்பாப்பையா கையெழுத்திட்டார்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 15, 2023
“இரயில்வே சொத்து தனியாருக்கல்ல, மக்களுக்கானது. போகிறபோக்கைப் பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. இதை அனுமதிக்ககூடாது” என்று கூறினார். 1/2 pic.twitter.com/iSuhtOpvQZ
இது மக்களுடைய சொத்தாக இருக்கிறது. இந்த சொத்தை தனியாருக்கு விற்பது என்பது, போகிற போக்கில் நாட்டையே தனியாருக்கு விற்று விடலாம் போல இருக்கிறது. மிகப்பெரிய மாற்று வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இது கூடாது. என்றைக்கும் போலவே மக்கள் அங்கு சென்று ஓடவும், விளையாடவும், நடக்கவும் மைதானம் இருக்க வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்" இவ்வாறு அதில் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications