மதுரை அருகே பரபரப்பு.. மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற அரசு போக்குவரத்து ஊழியர்
Recommended Video
மதுரை: மதுரை புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து ஊழியர் ஒருவா் 70 அடி மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் பாலசுப்பிரமணியம். இங்கு இவர் 10 வருடமாக பணி புரிந்து வருகிறார்.

இவருக்கு காலில் அடிபட்டதால் பொது மேலாளர் அனுமதியுடன் 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றார். இந்நிலையில் அவருக்கு டெப்போ அதிகாரிகள் மருத்துவ விடுப்பு அளிக்காமல் சம்பளத்தை பிடித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியம், அங்குள்ள 70 அடி மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். சுமார் ஒரு மணி நேரமாக மின் கோபுரத்தில் இருந்து இறங்க மறுத்த அவரிடம் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும்அரசு போக்குவரத்து கழக கிழக்கு மண்டல மேலாளர் நடராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் சமாதானமடைந்த பாலசுப்பிரமணியத்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக கீழே இறக்கினார்கள். அவரது சம்பள பிடித்தம் குறித்து உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சக ஊழியர்கள் கூறுகையில், டெப்போவில் அரசியல் ரீதியாக வீரபத்திரன் என்பவர் மற்ற ஊழியர்களை பழிவாங்குவதாக கூறினர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications