வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் அனுமதி தேவையில்லை என்ற அரசாணைக்கு தடை.. ஐகோர்ட் அதிரடி
மதுரை: சமீபத்தில் மதம் சார்ந்த கட்டிடங்களுக்கு மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் இன்றி, திட்ட அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை ஏற்கனவே உள்ள விதிகளுக்கு எதிரானது என மதுரையை சேர்ந்த கலாநிதி வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் முன் அனுமதி சான்று பெற தேவையில்லை என்ற அரசாணைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது.
மதுரையை சேர்ந்த கலாநிதி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "தமிழ்நாட்டில் எந்தவொரு கட்டிடத்தையும் மத நிறுவனமாக கட்டுவது அல்லது மாற்றுவது ஒருபோதும் தடையற்ற உரிமையாக இருக்கவில்லை. மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க, பிற மத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய மத நிறுவனங்கள் நிறுவப்படக்கூடாது என்று நீதிபதி வேணுகோபால் ஆணையம் பரிந்துரைத்தது. அதன் பேரில் மாவட்ட, நகராட்சி கட்டிட விதிகள் சட்டங்களின்படி, பொது வழிபாடு அல்லது மத நோக்கங்களுக்காக கட்டிடங்களை கட்டுவதற்கு மதுரை மாவட்ட கலெக்டரின் முன் ஒப்புதல் கட்டாயமாக தேவைப்பட்டிருக்கிறது.

அத்தகைய கட்டுமானம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் அனுமதி மறுக்க மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்து உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் மதம் சார்ந்த கட்டிடங்களுக்கு மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் இன்றி, திட்ட அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்த அரசாணை ஏற்கனவே உள்ள விதிகளுக்கு எதிரானது.
எனவே வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்று தேவையில்லை என விலக்கு அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கே.பி.நாராயணகுமார் ஆஜராகி, வழிபாட்டுத்தலங்களின் கட்டிடங்களுக்கு கலெக்டரின் முன் அனுமதி சான்றிதழ் தேவையில்லை என்ற உத்தரவின் மூலமாக சமூக நல்லிணக்கம், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
இதனை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், மேற்கண்ட அரசாணைக்கு தடை விதித்தும், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications