மதுரையில் நீதிபதியிடமே மாணவி பாலியல் தொல்லை தொடர்பாக புகாரால் திருப்பம்.. பேராசிரியர், மாணவர் கைது
மதுரை: மதுரையில் நீதிபதியிடமே மாணவி பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது . கல்லூரியில் ஆசிரியைகள் உள்பட 15 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். மாணவர் ஒருவரும் சிக்கினார். 2 பேராசிரியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் மதுரை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஜெகன் கருப்பையா (வயது 42) பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் அளித்தார்.
மேலும் மதுரை மகிளா கோர்ட்டில் நீதிபதியிடம் அந்த மாணவி புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் செக்கானூரணி போலீசார் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.
செக்கானூரணி போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, அங்கு பணிபுரியும் 3 பேராசிரியைகள், மாணவிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் போலீசாரை தேடி வந்து, தாமாக முன்வந்து, ஜெகன் கருப்பையா உள்பட சில பேராசிரியர்கள் மீது பாலியல் தொல்லை புகார் தெரிவித்தனர். அப்போது மாணவர் ஒருவர் மீதும் புகார் தெரிவித்தார்.

இந்த புகார் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் பேராசிரியர் ஜெகன் கருப்பையா மற்றும் மாணவர் ஒருவரை கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் பேராசிரியர்கள் ஞானசேகர், ஸ்டாலின் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலியல் சம்பவம் தொடர்பாக பேராசிரியைகள், மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தொடர்பாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications