பில்கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்து கொடுத்த மோடிக்கு.. கீழடி அறிக்கை பிடிக்கவில்லை ஏன்?-சு.வெங்கடேசன்
மதுரை: கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெறும், முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்திருக்கிறார். இந்நிலையில், கீழடி ஆய்வறிக்கை பிடிக்கவில்லையே ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"'கடந்த ஆண்டு தூத்துக்குடி முத்துக்களை பில்கேட்ஸுக்கு பரிசாக வழங்கினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவிலேயே 3000 ஆண்டுகளுக்கு முந்தைய முத்துக்கள் அகழாய்வில் கிடைத்தது கீழடியில் மட்டுந்தான். வரலாற்றின் முத்தான கீழடி அறிக்கை ஒன்றிய அரசிற்கு கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அது ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை பிரதமரே?" என்று தனது எக்ஸ் தளத்தில் சு.வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரைக்கு பக்கத்து மாவட்டமான சிவகங்கையில் கீழடி எனும் பகுதியில் தொல்லியல் தளம் இருப்பதை கடந்த 2014ம் ஆண்டு, அப்போது இந்திய தொல்லியல் துறையில் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்டுபிடித்தார். இதனைடுத்து இந்த தளத்தில் 2014-2015 மற்றும் 2015-2016 என இரண்டு ஆண்டுகளுக்கு தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகள் குறித்து சேகரிக்கப்பட்ட தகவல்களை கொண்டு அகழ்வாய்பு அறிக்கையை தயார் செய்து, கடந்த 2023ல் அதை இந்திய தொல்லியல் துறையிடம் சமர்பித்தார்.
ஆனால் 2 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட இந்த அறிக்கை வெளியாகாமல் இருக்கிறது. இதையடுத்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. தொடர் கேள்விகள் எழுந்த நிலையில், போதுமான ஆதாரங்களை தர வேண்டும் என்று கோரி, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அறிக்கையை தொல்லியல் துறை திருப்பி அனுப்பியிருந்தது.
982 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், கீழடியில் மூன்று பண்பாட்டு கட்டங்கள் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது,
கி.மு. 8-5
கி.மு. 5-1
கி.மு. 1ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி கி.பி. 3 நூற்றாண்டை கடந்து செல்கிறது
என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில்தான் இந்திய தொல்லியல் துறை கேள்விகளை எழுப்பியிருந்தது. இதில் கி.மு. 8-5ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இங்கு மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் மற்றும் அடுத்த இரண்டு காலகட்டத்தை ஏஎம்எஸ் காலக் கணிப்பு முறைப்படி உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது.
மட்டுமல்லாது கி.மு. 8-5 என்பது மிகைப்படுத்தப்பட்ட காலம் என்றும், அதிகபட்சமாக கி.மு 3ம் நூற்றாண்டு வரை இருக்கலாம் எனவும் தொல்லியல் துறை கூறியிருந்தது.
இப்படி கூறி அறிக்கையை திருப்பி அனுப்பியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாட்டை சேர்ந்த அறிஞர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும், மதுரை எம்பியுமான சு.வெங்கடேசன் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் கவனம் பெற்றிருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications