தமிழ்நாட்டை போட்டுப் பார்க்கிறீங்களா? ராமரையே கைவிட்ட உங்களுக்கு நாங்க எம்மாத்திரம்? சு.வெ கொதிப்பு!
மதுரை: தமிழ்நாட்டை "போட்டுப் பார்க்கிற" வேலையை வெளிப்படையாகவே செய்கிறார்கள், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்துள்ளனர் என கொந்தளித்துப் பேசியுள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1 அன்று இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என சு.வெங்கடேசன் எம்.பி அறிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டை ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மேலும், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இஉள்ளது என கடுமையாக விமர்சனம் செய்தனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது திமுக.
இந்த நிலையில் மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டுக்கான பட்ஜெட்டாக இல்லாமல் நாற்காலிக்கான பட்ஜெட்டாக உள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் பீகாருக்கு மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் சந்தர்ப்பவாத பட்ஜெட்டாக உள்ளது.
பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மிக மிக குறைவு. அதுவேதான் இந்த பட்ஜெட்டிலும் தொடர்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மிகக் கொடுமையாக வஞ்சிக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது. மதுரை மெட்ரோ, கோவை மெட்ரோ, மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. உட்கட்டமைப்பில் தமிழ்நாட்டை போட்டுப் பார்க்கிற வேலையை வெளிப்படையாகச் செய்கிறார்கள். ஒட்டு விழவில்லை என்பதால் ராமரையே பாஜக கைவிட்டது, அவர்கள் தமிழ்நாட்டை கைவிட்டதைப் பற்றி பெரிய ஆச்சர்யம் இல்லை.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு தர மறுக்கிறது. பீகாரில் உள்ள கோசி நதியில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக 21,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. மாநிலங்களை பழி வாங்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நாளையோடு பட்ஜெட் மீதான விவாதம் முடிகிறது. ஆனால் இன்று வரை ரயில்வே திட்டங்கள் குறித்த பிங்க் புக் ( Pink Book ) வெளியிடப்படவில்லை . 2017-ல் ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு நிறுத்தியது. இப்பொழுது ஆவணங்களை வெளியிடும் முறையையும் ஒழிக்கிறார்கள். ரயில்வேயில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ரயில்வே வரலாற்றில் இல்லாத அளவிற்கு விபத்துக்கள் நடந்துள்ளன.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரயில் மறியல் நடத்தப்பட உள்ளது. இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும், பட்ஜெட்டை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேசி வருகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றம் ஒரு போராட்ட களமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications